அந்த விஷயத்தில் எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் இளையராஜா தான் அவர் மட்டும் இல்லன்னா..? அதோ கதிதான் போல!..

எம்.ஜி.ஆர் அவர் வாழ்க்கையில் நடித்த ஒரே மலையாள படம் என்றால் அது ”ஜெனோவா” அந்த படத்தில் அவர் மலையாளம் சரியாக பேசவில்லை, அவரின் மலையாளம் தமிழ் போல் இருக்கிறது என்று அந்த படத்தில் இயக்குனர் சொன்னதால் நான் ஒரு தமிழன் தான் என்று கோபப்பட்டு மலையாளத்தை விட்டு வெளியே வந்தார். மலையாள சினிமா உலகம் தமிழ் சினிமா போல் பல்லாயிரக்கணக்கான கோடி வியாபாரங்களை செய்வதில்லை. தமிழில் உள்ள வியாபாரத்தில் பாதி கூட அங்கே இல்லை.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவ்வளவு பணம் புரள்கிறது என்றால் அதை தமிழில் முதலில் ஆரம்பித்து வைத்தவர் எம்.ஜி.ஆர். தெலுங்கில் என்.டி.ஆர். என்னதான் எம்.ஜி.ஆர் அதைத் தொடங்கி வைத்தாலும் அதை நீண்ட தூரத்துக்கு தூரத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை இளையராஜாவை சேரும். எம்.ஜி.ஆர் போல் வேறு ஒருவர் தமிழ்நாட்டில் உண்டு என்றால் அது இளையராஜா மட்டும்தான். காரணம் அவர் தான் தமிழ் மியூசிக் ஆல்பம் செல்லிங் இண்டஸ்ட்ரி (Music Album Selling Industry) கேசட்டுகளை விற்பதுக்கான காரணமாய் அமைந்தது.

இன்று தமிழ் இசை சர்வதேச அளவில் ஏ.ஆர்.ரகுமான் மூலம் பணம் சம்பாதித்து கொடுக்கிறது. இளையராஜா வருவதற்கு முன் எல்லோரும் இலவசமாக ரேடியோ கேட்பார்கள். இளையராஜா தான் சினிமா பாட்டுக்கு பணத்தை உருவாக்கியது. எம்.ஜி.ஆர் இளையராஜா இருவரும் வந்திருக்காவிட்டால் மலையாளம், ஒரியா அல்லது வங்காள படம் போல் பணம் இல்லாத ஒரு துறையாக இருந்திருக்கும். இளையராஜா தன்னுடைய பாடலுக்கு முதலில் ராயல்டி வாங்கவில்லை. மற்றவர்கள் அவரை இப்பொழுது மாற்றி விட்டார்கள்.

தயாரிப்பாளர் பணம் போட்டு எடுத்த படம் நல்லா இல்லை என்றால் கூட அந்த படம் லாபமாக மாறும் அளவிற்கு இளையராஜாவின் இசை இருக்கும். தமிழில் திரைத்துறை மற்றும் இசை துறை சர்வதேச அளவில் பணம் கொழிக்கும் இடமாக மாறியதன் காரணம் இவர்கள் ஆரம்பித்துவிட்டது தான். இப்பொழுது மணிரத்தினம், சங்கர் ஆகியோர் அதனை பெரிதாக மாற்றிவிட்டார்கள். தமிழ் திரைப்படத் துறை என்பது மக்கள் வாரி வழங்கும் பொருளாதார தொழிலாக மாற்றியது எம்.ஜி.ஆர் மற்றும் இளையராஜா அவர்களால்தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...