வீட்டுக்கு அனுப்பப்படும் பேஸ்புக் ஊழியர்கள்.. கதற வைக்கும் மார்க் ஜுக்கர்பெர்க்..!

2023 ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து கூகுள், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பதும் இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து தற்போது வேறு வேலையை தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாப்ட், அமேசான், பிளிப்கார்ட், டிஸ்னி, கூகுள், டெல்சா, உள்ளிட்ட பெரிய நிறுவனங்களும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கை எடுப்பது குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. மேலும் ஒரு சில நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளனர்

அந்த வகையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் அடுத்த வாரம் ஒரு மிகப்பெரிய வேலை நீக்க நடவடிக்கையை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, அடுத்த வாரம் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தொடங்கும் என்று தி இன்ஃபர்மேஷன் அறிக்கை தெரிவித்துள்ளது. பணிநீக்கங்கள் அனைத்து நிலைகளிலும் செயல்பாடுகளிலும் உள்ள ஊழியர்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டிக் டாக் போன்ற போட்டியாளர்களிடம் இருந்து அதிகரித்த போட்டி மற்றும் ஒழுங்குமுறை ஆய்வு உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொள்வதால் பணிநீக்கங்கள் செய்யப்பட்டதாக தெரிகிறது. கடந்த மார்ச் மாதத்தில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ’தங்கள் நிறுவனம் சில கடுமையான சவால்களை எதிர் கொள்கிறது என்றும், வெற்றி பெற அதிக  முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

பணிநீக்கங்கள் ஊழியர்கள் மத்தியில் சில சவால்களையும் எதிர்வினையையும் ஏற்படுத்தும் என்பதால் இந்த சவால்களை மெட்டா எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், பணிநீக்கங்கள் நிறுவனம் நீண்ட காலத்திற்கு வெற்றி பெற தேவையான மாற்றங்களை செய்வதில் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts