உங்களை மிஸ் பண்றோம் என்று குவிந்த மெசேஜ்கள்… உருக்கமாக இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்ட செஃப் வெங்கடேஷ் பட்…

செஃப் வெங்கடேஷ் பட் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மக்களால் அதிகமாக விரும்பப்படும் சமையல்கலை வல்லுநர் ஆவார். உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ஃபாலாவேர்ஸ் மற்றும் ரசிகர்கள் உண்டு. எந்த வகை உணவாக இருந்தாலும் எளிமையாக வீட்டில் இல்லத்தரசிகள் செய்யும் படி கற்றுத் தருவதில் வல்லவர்.

2014 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சமையல் சமையல்’ நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனார். ஸ்டார் ஹோட்டல் உணவு வகைகளையும் வீட்டில் செய்ய முடியும் என்பதை எடுத்து காட்டியவர் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள். தனது அனுபவத்துடன் சமையல் நுணுக்கங்களையும் சேர்த்து சமைத்து காட்டுவார். அதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவரது சமையல் நிகழ்ச்சிக்காக மக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் காத்துக் கொண்டிருப்பார்கள்.

இருப்பினும் விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் நடுவராக பங்கேற்ற பிறகு தான் உலகெங்கிலும் ரசிகர்களைப் பெற்றார். இவரும் செஃப் தாமு அவர்களும் நடுவர்களாக கோமாளிகளுடன் செய்யும் அட்டகாசங்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

கடந்த குக் வித் கோமாளியின் நான்கு சீசன்களில் பட் அவர்கள் நடுவராக பங்கேற்றிருந்தார். இந்த ஆண்டு குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்க இருப்பதாக செய்திகள் வந்தன. அதோடு பட் அவர்கள் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற செய்தியும் வந்து அவரது ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளியில் இருப்பார் என்று சேனலும் அறிவித்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் குக் வித் கோமாளி சீசன் 5 கோலாகலமாக தொடங்கியது. முதல் எபிசொட் முடிந்ததுமே பட் அவர்களுக்கு இன்ஸ்டாவில் மெசேஜ்கள் குவிந்தன. அவரது ரசிகர்கள் நீங்கள் இல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நன்றாக இல்லை, உங்களை மிஸ் பண்றோம், நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை வளர்த்து விட்டவர் நீங்கள் தான், ஆனால் உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட செஃப் தாமு உட்பட யாரும் பேசவில்லை என்று மனக்குமுறல்களை வெளிப்படுத்தி இருந்தனர்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் உருக்கமாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் கூறியது என்னவென்றால், நீங்கள் எல்லாரும் என்னை மிஸ் செய்து மெசேஜ் செய்திருந்ததை பார்த்தேன், உங்கள் அன்பு கிடைத்ததற்கு நான் புண்ணியம் பண்ணிருக்கணும், மக்களாகிய உங்களை நான் எப்போவும் ஏமாற்ற மாட்டேன், விரைவில் சன் டிவியின் புதிய நிகழ்ச்சி ஒன்றில் உங்களை சந்திப்பேன் என்று கூறியிருந்தார் செஃப் வெங்கடேஷ் பட்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...