மேஷம் வைகாசி மாத ராசி பலன் 2024!

மேஷ ராசி அன்பர்களே! வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை மாதத்தின் துவக்கத்திலேயே குரு பகவான் 2 ஆம் வீட்டில் அமர்வு செய்வார்; குரு பகவான் 2 ஆம் வீட்டில் அமர்வு செய்வது மிகவும் விசேஷமாகும்.

தன ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் உங்கள் நிலையினை நன்கு உயர்த்துவார்; பொருளாதாரத்தில் ஏற்கனவே இருந்த சிக்கல்களை நீக்கி பொருளாதாரத்தினை உயர்த்துவார். மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக உயர்வினை ஏற்படுத்துவார். செய்யும் முயற்சிகளுக்கு வெற்றியினைப் பெறுவீர்கள்.

வாக்குஸ்தானத்தில் குரு பகவான் இருப்பதால் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் மிகவும் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையக்கூடிய காலகட்டமாகும் இந்த வைகாசி மாதம் இருக்கும்.

ராசிநாதனான செவ்வாய் பகவான் 12 ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரயச் செலவுகள் ஏற்படும்; எடுக்கும் காரியங்களில் சிறு சிறு அலைச்சல்கள் இருக்கத்தான் செய்யும்.

செய்யும் முயற்சியினை ஒருமுறைக்கு இருமுறை செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒரு வேலையினைச் செய்யும் முன் சிந்தித்து முறையாகத் திட்டமிட்டு செய்தால் தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்கலாம்.

வண்டி, வாகனங்கள் ரீதியான விரயச் செலவுகள் ஏற்படும். வைகாசி மாதம் 19 ஆம் தேதி செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகி ராசிக்குள் நுழைகிறார். வைகாசி 6 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியாகி 2 ஆம் வீட்டுக்குள் ஆட்சியாகிறார்; இதனால் புதுப் பொருட்கள் சேர்க்கை ஏற்படும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை திருமண முயற்சிகள் அனுகூலமாகும் காலகட்டமாக வைகாசி மாதம் இருக்கும். புதன் பகவான் உடல் உபாதைகளை அவ்வப்போது கொடுப்பார்; தேவைக்கேற்ற பொருள் கையில் இருக்கும்; ஆனால் பணத்தைக் கையாளும்போது கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையேல் புதிய கடன்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகளுடன் கவனமாக இருத்தல் வேண்டும்.

6 ஆம் வீட்டில் கேது பகவான் உள்ளார்; வெளிநாடு செல்ல முயற்சி செய்வோருக்குப் பலன் கிட்டும் காலமாக இருக்கும். பல நுட்பமான விஷயங்களைச் செய்து வெற்றியினைப் பெறுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews