மேஷம் குரு பெயர்ச்சி ராசி பலன் 2023!

ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியில் மேஷ ராசிக்கு ஜென்ம குரு. ஜென்ம குருவில் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

வீட்டில் சுப காரியங்கள் நடந்தேறும்; இதுவரை திருமணம் சார்ந்த விஷயங்களில் இருந்த தடைகள் அகலும். திருமணத்தைத் தள்ளிக் கொண்டு போனால் பல ஆண்டுகளுக்குத் திருமணம் தள்ளிப் போகும்.

பெற்றோர்களுடன் இருந்த விரிசல் சரியாகும். வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் என குரு பெயர்ச்சி உங்களுக்கு பல மகிழ்ச்சிகரமான மாற்றங்களைக் கொடுக்கும்.

கூட்டுத் தொழில் செய்து வந்தோர் தனிப்பட்ட ரீதியாக தொழிலைத் துவங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் கடந்த காலங்களில் சந்தித்த பிரச்சினைகள் சரியாகும்.

மாணவர்கள் கல்விரீதியாக தெளிவான சிந்தனையுடன் இருப்பார்கள். உடல் ஆரோக்கியம்ரீதியாக கண் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக் கூடும். முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

காதலர்களைப் பொறுத்தவரை காதலை வீட்டில் சொல்லும்போது பெற்றோர் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டாமல் பிள்ளைகளுக்காக ஏற்றுக் கொள்வர்.

பழைய கடன்களை அடைக்கும் வகையில் பணவரவு சிறப்பாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு முயற்சியும் இழுபறியாக இருந்தநிலையில் தற்போது அவை மாறும்.

குடும்பத்துடன் பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட்டு வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews