மேஷம் ஆவணி மாத ராசி பலன் 2022!

வயிற்றில் உபத்திரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மனக் கஷ்டங்கள் இந்த ஆவணி மாதத்துடன் முடிவுக்கு வரும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இருந்துவந்த கஷ்டங்கள் மறையும் காலமாக இருக்கும்.

எல்லா விதத்திலும் அனுகூலங்கள் நிறைந்து காணப்படும். பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களுக்குச் சென்று வருதல் நன்மை பயக்கும். எந்தவொரு விஷயத்திலும் படபடப்பு வேண்டாம். ஆவணி மாதத்தில் பல காலங்களாக முடியாமல் இருந்த கஷ்டங்கள் முடிவுக்கு வரும் காலமா இருக்கும்.

இதுநாள் வரை இருந்த பணத் தட்டுப்பாடு தீரும், வீடு, மனை வாங்கும் சூழ்நிலைகள் அமையப் பெறும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல பணவரவு இருக்கும். குடும்பத்தில் அன்னியோனிய குறையானது நீங்கும்.

நிதானத்துடன் செயல்பட்டு பல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்த பாரங்கள் குறையும். பலரும் உங்களைப் பார்த்து ஆச்சரியம் கொள்ளும் அளவு உங்கள் வாழ்க்கையானது மாறும்.

எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையானது ஏற்படும். நீண்டநாட்களாக நிறைவேறாமல் இருந்த விஷயங்களைச் சரிசெய்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனக் கசப்பு ஏற்படும், எதிலும் அவசரத்தனம் வேண்டாம். குல தெய்வ வழிபாடு செய்வது மற்றும் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுத்து வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.