மீனம் புரட்டாசி மாத ராசி பலன் 2022!

குரு பகவான் ஆட்சி பீடத்தில் உள்ளார், 7 ஆம் இடத்தில் புதன் உச்சநிலையில் உள்ளார். சுக்கிரன் கன்னி இராசியின் மீது ஆட்சி செய்து குருவின் பார்வையில் உள்ளார்.

புரட்டாசி 10, 11, 12 தேதிகளில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும், புது முயற்சிகள் எதிலும் ஈடுபட வேண்டாம். பேச்சினைக் குறைத்துக் கொண்டு, வாக்கினைக் கொடுக்கும்போது கவனத்துடன் இருத்தல் வேண்டும்.

அசையாச் சொத்துகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். இடம் விற்பது, வாங்குவது என நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும். தாய் வழிச் சொந்தங்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும், மேலும் தாயின் உடல் நலனில் மந்தநிலை காணப்படும்.

குழந்தைகள் கல்வியில் மந்தத்துடன் காணப்படுவார்கள்.  தந்தையால் அனுகூலங்கள் கிடைக்கப் பெறும். மறுமணம் உட்பட திருமணத்திற்காக காத்திருக்கும் அனைவருக்கும் திருமண வரன்கள் கைகூடும்.

பதவி உயர்வு, இடமாற்றம், வேலை மாற்றம், சம்பள உயர்வு என நீங்கள் வேண்டிய விஷயங்கள் கிடைக்கப் பெறும். சொத்துகளில் முதலீடு செய்வீர்கள், சுக்கிரனின் ஆதிக்கம் பணரீதியான, மனரீதியான மகிழ்ச்சிகளை அள்ளிக் கொடுக்கும்.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் கூடுதல் கவனம் தேவை, வேலையில் ஆர்வம் காட்டி மும்முரம் காட்டுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும், பண வரவு, பொருள் வரவு என மகிழ்ச்சியால் நிறைந்து காணப்படுவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews