மீனம் பங்குனி மாத ராசி பலன் 2023!

மீன ராசியினைப் பொறுத்தவரை ஜென்மத்தில் குரு பகவான் உள்ளார். குடும்பத்தில் விரயச் செலவுகள் ஏற்படும். பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும். 4 ஆம் இடத்தில் செவ்வாய் பகவானும், 2 ஆம் இடத்தில் சுக்கிரனும் இட அமர்வு செய்துள்ளனர். 3 ஆம் இடத்திற்கு சுக்கிரன் பங்குனி மாத பிற்பாதியில் இடப் பெயர்ச்சி செய்கிறார்.

2 ஆம் இடத்தில் சனி பகவானின் பார்வை இருப்பதால் இனிமையாகப் பேசினாலும் கூட தவறாகவே எடுத்துக் கொள்வர். எதிர்மறையாகப் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சனி பகவானின் தாக்கத்தில் இருந்து குரு பகவான் உங்களைக் காப்பாற்றுவார்.

உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும். சிறு சிறு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறும்; உடன் பிறப்புகளுடனான பிரச்சினைகள் சரியாகும்.

எதிரிகள் உங்களுக்கு அதிகமாவார்கள்; அதனால் எந்தவொரு செயலைச் செய்யும் முன்னும் முன்னோக்கிப் பார்த்துச் செயல்படுதல் வேண்டும். 2 ஆம் இடத்திற்கு புதன் பெயர்வு அடைகிறார், தாயுடன் மன வருத்தம் ஏற்படும்.

நண்பர்களால் ஆதாயப் பலன்கள் கிடைக்கும், அவசரப்பட்டு பெரிய அளவிலான பண முதலீடு எதுவும் செய்ய வேண்டாம். பண விவகாரங்கள் சற்று தொய்வினை ஏற்படுத்தும். ஆனால் வெற்றிக்காக நீங்கள் எடுக்கும் கடுமையான முயற்சிகள் நேர்மறையான பலனைக் கொடுக்கும்.

முடிந்தளவு அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை நிறுத்திக் கொள்ளவும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.