மீனம் சித்திரை மாத ராசி பலன் 2023!

மீன ராசியினைப் பொறுத்தவரை ஜென்ம குருவாக இருக்கும் குரு பகவான் 2 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். கடன்கள் அதிகரிக்கும் மாதமாக இருக்கும்; குழந்தைகளின் கல்விரீதியாக கடன், குடும்பத் தேவைகளுக்காகக் கடன் என கடன்களை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.

கடன் கொடுக்கல், வாங்கலில் பெரும் எச்சரிக்கை தேவை; பணப் பற்றாக்குறை மாதம் முழுவதும் இருக்கும். உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படும், மருத்துவ ரீதியான விரயச் செலவுகள் ஏற்படும்.

குழந்தைகளால் மனக் கவலைகள் ஏற்படும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வீடு கட்டுவோருக்கு வேலையில் இழுபறியில் இருக்கும். பூமி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

தொழில்ரீதியாக மேன்மை ஏற்படும். தொழில் கூட்டாளர்களுடன் வாக்குவாதங்கள் செய்யாமல் சுமூகமாகச் செல்வது நல்லது. உத்யோகம் ரீதியாக பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற விஷயங்களில் தாமதம் இருந்தாலும் இறுதியில் உங்களை மகிழ்விக்கும் விஷயங்கள் நடக்கப் பெறும்.

குடும்பத்தில் கணவன்- மனைவி இடையேயான உறவில் மன வெறுமை ஏற்படும். நாத்தனார்களின் தலையீட்டால் கணவன்- மனைவி இடையே பிளவு ஏற்படும் வகையிலான பிரச்சினைகள் ஏற்படும்.

பொழுதுபோக்குகள் ரீதியாக விரயச் செலவுகள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் ரீதியாக பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். பெருமாள் வழிபாடு செய்து வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews