மீனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2023!

மீன ராசியினைப் பொறுத்தவரை 2 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். சனி பகவான் 12 ஆம் இடத்தில் உள்ளார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். செய்யும் வேலையில் மன திருப்தி ஏற்படுகிறதோ இல்லையோ ஆனால் கிடைக்கும் பொருளாதாரத்தால் மன திருப்தியுடன் காணப்படுவீர்கள்.

தொழில்ரீதியாக அடுத்தடுத்த முயற்சிகளைச் செய்வீர்கள். பணப் புழக்கம் அதிகரித்துக் காணப்படும். லாபம் ஒருபுறம் கிடைக்கப் பெற்றாலும் மற்றொருபுறம் மன உளைச்சல், அலைச்சல் என்பது போன்ற விஷயங்களும் நடக்கும்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை நினைத்ததுபோல் விரைவில் நடந்தேறாவிட்டாலும் குறுகிய காலம் கழித்து அதுவாகவே சிறப்பாக நடந்தேறும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே மகிழ்ச்சி சார்ந்த விஷயங்கள் நடக்கப் பெறும்.

குழந்தை பாக்கியத்துக்கு எதிர்பார்த்து இருப்போருக்கு நற் செய்தி கிடைக்கப் பெறும். வாங்கிய பழைய கடன்களை அடைப்பீர்கள். மேலும் வீடு வாங்குதல், வீடு சார்ந்த புதுப்பித்தல் வேலைகள் செய்தல் என்பது போன்ற விஷயங்களைச் செய்வீர்கள்.

சுப காரியங்கள் சார்ந்த செலவினங்கள் ஏற்படும். செலவு ஒருபுறம் இருந்தாலும் பணவரவு மிகச் சிறப்பாகவே இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை தைரியத்துடன் செயல்படுவர். நினைத்த இலக்கை அடைவார்கள்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்பத்தின் அனுசரணை கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews