நாட்டாமை படத்தில் நடிக்க மாட்டேன்னு சொன்ன மீனா.. இதுதான் காரணமாம்.. அப்புறம் எப்படி நடித்தார் தெரியுமா..?

Actress Meena: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 1994 ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி வெளியான திரைப்படம் நாட்டாமை. சரத்குமார் நடித்த இந்த படத்தில் குஷ்பு, மீனா, சங்கவி, செந்தில், கவுண்டமணி, மனோரமா, பொன்னம்பலம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் சரத்குமார் சண்முகம், பசுபதி என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.அதோடு நடிகர் விஜயகுமாரும் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பார். 55 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

ஒரு பாடலை பத்து நாள் எடுத்தார்.. அமீர் இப்படிதான் பண்ணுவார்.. அம்மா நடிகை சரண்யா பகிர்ந்த தகவல்..!!

இன்றளவும் இந்த படத்திற்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு பலமுறை டிவியில் போட்டாலும் எத்தனை முறையும் பார்க்க தயார் என்று சொல்லும் அளவிற்கு தான் இந்த படமும் அட்டகாசமாக இருக்கும்.

இந்நிலையில் படத்தில் பசுபதி கதாபாத்திரத்தில் நடித்த சரத்குமாருக்கு மனைவியாக மீனாவும் சண்முகம் கதாபாத்திரத்தில் நடித்த நாட்டாமை சரத்குமாருக்கு மனைவியாக குஷ்புவும் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்தது தொடர்பாக மீனா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Nattamai

ஷூட்டிங் ஸ்பாட்டில் இப்படியொரு அவஸ்த்தயை அனுபவித்தாரா கண்ணகி பட நடிகை!

அப்போது முதலில் நாட்டமை படத்தில் பண்ண வேண்டாம் என்று நிராகரித்ததாக கூறியுள்ளார். அதற்கு காரணம் படத்தில் தன்னைவிட பெரிய நடிகை குஷ்பு இருப்பதாகவும் தனக்கு அடுத்ததாக சங்கவி என்ற ஒரு நடிகை இருப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளார்.

இதனால் தனக்கு அந்த படத்தில் பெரிதாக என்ன இருக்கப் போகிறது என்று நடிக்க மறுத்துள்ளார். ஆனால் கே எஸ் ரவிக்குமாரின் படம் அல்லவா பண்ணுங்க 20 நாள் தான் இயக்குனர் நாள் வேஸ்ட் பண்ண மாட்டார் என்று ஏராளமானோர் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

4 வாசலில் 4 கார்கள்.. ஆடம்பரத்தால் வீட்டை விற்று நடுத்தெருவுக்கு வந்த நடிகை!

அதன் பிறகு தான் மீனா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார். மேலும் இதுதான் மீனா கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடித்த முதல் படம். ஆனால் அதன் பிறகு கே எஸ் ரவிக்குமாரின் பல படங்களில் மீனா நடித்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.