மேடம்னு சொல்லணுமாம்!.. விசித்ரா போட்ட கண்டிஷன்.. உடனே மூக்குடைத்த பூர்ணிமா ரவி!..

பிக் பாஸ் வீட்டில் வயதான போட்டியாளர்களை கடைசி வரை வைத்திருக்க மாட்டார்கள். நடிகை ரேகா, சோபனா ரவி உள்ளிட்ட பலரை ஆரம்பத்திலேயே வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில், இந்த சீசனில் வயதான போட்டியாளராகவும் பூமர் ஆண்டியாகவும் உள்ளே விளையாடி வரும் விசித்ராவுக்கு புல்லி கேங்கை பிடிக்காத ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7

விஜே அர்ச்சனா மற்றும் விசித்ராவின் செல்வாக்கு நிகழ்ச்சியில் கூடியிருந்தாலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் விசித்ராவுக்கு மரியாதையே கிடைப்பது இல்லை. அதையே போட்டி கன்டென்ட்டாக மாற்றும் ஸ்ட்ராட்டஜியை போட்டு விளையாடி வருகிறார் விசித்ரா.

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகாவை அவர் காலி செய்ததும் இந்த வீட்டில் யாருக்குமே மரியாதையே இல்லை கமல் சார் என புலம்பி கமலை வைத்தே ஜோவிகாவை அழ வைத்து விட்டார்.

கூல் சுரேஷ் கெட்டப்பில் விசித்ரா

இந்நிலையில், தற்போது கூல் சுரேஷ் கெட்டப்பில் உள்ள விசித்ரா தற்போது, இனிமேல் விசித்ரா என யாரும் என்னை கூப்பிடக் கூடாது என்றும் விசித்ரா மேடம் என்று தான் அழைக்க வேண்டும் என கட்டளை இடுகிறார். 50 வயதில் என் வயதில் உள்ள பலரும் கஷ்டப்படுகின்றனர். ஆனால், இந்த வயதிலும் நான் விட்டுக் கொடுக்காமல் விளையாடி வருகிறேன். நீங்க என்ன மேடம்னு தான் கூப்பிடணும் என கண்டிஷன் போட, அடுத்த நொடியே பூர்ணிமா ரவி தனது அராத்தி வேலையை காட்டி உள்ளார்.

அப்போ நீங்களும் இனிமேல் என்னை பூர்ணிமா மேம் என்றே கூப்பிடுங்கள் என விசித்ராவின் மூக்கை உடைத்துள்ளார். மேலும், மாயாவும் சேர்ந்துக் கொண்டு விசித்ரா மேம் என்னையும் நீங்க இனிமே மேம் போட்டே கூப்பிடுங்க என ஆப்படித்து விட்டார்.

மேடம்னு கூப்டுங்க

வயது காரணமாக யாரையும் யாரும் மதிக்க மாட்டார்கள் என்றும் அவர்களின் நடத்தை தான் அவர்கள் மீதான அன்பையும் மரியாதையும் வழங்கும் என்றும் சரியில்லை என்றால் சிறுவர்கள் மிதித்து விட்டுத் தான் போவார்கள் என்றும் பிக் பாஸ் ரசிகர்களும் அந்த ப்ரோமோவுக்கு கீழ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

முந்தைய ப்ரோமோவில் விஷ்ணுவும் தினேஷும் ப்ரோமோ பொறுக்கி எனும் விஷயத்துக்காக சண்டை போட்ட நிலையில், இந்த வாரத்துக்கான அடுத்த பஞ்சாயத்து ரெடி என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...