இளையராஜா பயோபிக்கை இயக்க மாரி செல்வராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட இதுதான் காரணமா?..

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் திரைக்கதை எழுதவுள்ளார். மேலும் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை மாரி செல்வராஜுக்கு வழங்காததற்கு காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் அந்தணன்.

இளையராஜா பயோபிக்:

அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமான இளையராஜா 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி பாடல்களுக்கும் பணிபுரிந்துள்ளார். இவரது மகன்கள் கார்த்திக்ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசை பயின்றுள்ளனர். கார்த்திக்ராஜா பிரபலமாக அறியப்படவில்லை என்றாலும் யுவன் ஷங்கர் ராஜா தற்போது முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். மேலும் சமீபத்தில் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக்கை படமாக எடுக்க உள்ளனர். அதில், நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க உள்ளார். முன்னதாக இயக்குநர் பால்கி மற்றும் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்குவதாக இருந்து வந்த நிலையில் இப்படத்தின் அறிமுக விழா சமீபத்தில் நடந்தது அதில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கவிருப்பதாகவும் உலக நாயகன் கமல்ஹாசன் திரைக்கதை எழுதவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர். மேலும், தனுஷ் இளையராஜாவாக ஒரு ஆர்மோனியப் பெட்டியுடன் சென்ட்ரல் அருகே சேற்றில் நிற்பது போல் வெளியிட்டிருந்த போஸ்டர் சர்ச்சையை ஏற்ப்படுத்தியிருந்தது.

மாரி செல்வராஜுக்கு மறுப்பு?:

கமல்ஹாசன் திரைக்கதை எழுதினாலும் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குவதற்கு பல விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படு தோல்வியை அடைந்த நிலையில் இளையராஜா படமும் அவரே இயக்குவதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ப்ளு சட்டை மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் அடிப்படை ஆராய்ச்சி கூட இல்லாத போஸ்டர் டிசைன். அருண் மாதேஸ்வரனும், தனுஷூம்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்துருக்காங்களோ..” என்று கலய்த்து கமெண்டினை பதிவிட்டிருந்தார்.

இப்படத்தில் மாரி செல்வராஜ் இயக்க வாய்ப்பு வழங்காததது குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசுகையில், தனுஷ் இப்படத்தை இயக்க தனக்கு விருப்பமான இயக்குநர்களை இளையராஜாவிடம் அனுப்பி வைத்ததாகவும் ஆனால், மாரி செல்வராஜ் பெயரைக் கேட்ட உடன் நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதற்கு காரணம் இளையராஜாவும் மாரி செல்வராஜும் ஓரே பிரிவை சேர்ந்தவர்கள் எனவே நாளடைவில் ஓரே பிரிவினரை சேர்ந்தவர்கள் படம் எடுக்கிறார்கள் என்ற பேச்சு வரக்கூடாது என இளையராஜாவே வேண்டாம் என கூறியதாக அந்தணன் பேசியிருக்கிறார்.

மேலும் இளையராஜா ஏன் அப்படி நினைக்க வேண்டும், அவர் சாதிமத வேறுபாடு இன்றி அனைவரின் மனதின் உயரத்தில் இடம்பிடித்துள்ளார் என்பது தான் உண்மை. பெரிய இசைமேதையெல்லாம் அவரிடம் இசை பயின்றுள்ள நிலையில் அவர் அப்படி நினைத்திருக்க வேண்டியது இல்லை என்றும் அந்தணன் பேசியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...