பேராசை பெருநஷ்டம்!.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு வந்த புதிய சிக்கல்.. என்ன ஆச்சு?

மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலேயே இந்த திரைப்படம் ரஜினிகாந்த் நடித்த சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தின் வசூலை முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம் வெறும் 16 கோடி ரூபாயை வசூல் செய்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டிலேயே 20 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 கோடி வசூல்:

கமல்ஹாசனை நேரில் வந்து சந்தித்த மஞ்சுமெல் பாய்ஸ் குழுவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல தமிழ்நாட்டு ரசிகர்களையும் கவர்ந்த அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

கமல்ஹாசன் நடித்து வெளியான குணா திரைப்படம் ஓடாமல் தோல்வியை சந்தித்தாலும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு குணா குகைக்குள் விழுந்த ஒருவரை அவரது நண்பன் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய உண்மை சம்பவத்தை தழுவி இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது.

மேலும், கிளைமாக்ஸ் காட்சியில் சரியான இடத்தில் குணா படத்தில் இடம்பெற்ற “ கண்மணி அன்போடு காதலன்” பாடலில் வரும் “ மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல” என்கிற வரிகள் ரசிகர்கள் மத்தியில் எமோஷனல் கனெக்ட் ஆன நிலையில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கும் சம்மர் ஆரம்பித்து விட்ட நிலையில் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கும் படையெடுத்து வருகின்றனர்.

ஓடிடியில் வியாபாரம் ஆகல:

100 கோடி வசூல் செய்த இந்த படம் ஓடிடியில் எப்போது வரும் என படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்காத பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், எந்த ஒரு ஓடிடி நிறுவனமும் அதிக தொகை கொடுத்து மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை வாங்கும் முன் வரவில்லை என்கிற அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

20 கோடி பட்ஜெட்டில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்துக்கு 10.5 கோடி ரூபாய் வரை ஓடிடி நிறுவனங்கள் கொடுக்க தயாராக இருந்ததும் அதிகபட்சமாக 20 கோடி ரூபாயை தயாரிப்பில் நிறுவனம் டிமாண்ட் செய்து வருவதால்தான் இந்த சிக்கல் என்கிற தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓடிடி நிறுவனங்கள் ஆரம்பத்தில் சந்தாதாரர்களை பிடிக்க அதிக தொகைக்கு புதிய படங்களை வாங்கி வெளியிட்டு வந்தனர். ஆனால், தொடர்ந்து அவர்கள் வாங்கி வெளியிட்ட பல படங்கள் ஓடிடியிலும் ஓடாத நிலையில் புதிதாக ஒரு படங்களுக்கும் பெரிய நடிகர் அல்லாத படங்களுக்கும் பெரிய தொகை கொடுக்க முடியாது என்கிற முடிவுக்கு அந்த நிறுவனங்கள் வந்திருப்பதாக கூறுகின்றனர்.

மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 10.5 கோடிக்கு ஓடிடி நிறுவனத்துக்கு படத்தை கொடுக்க முன்வந்தால் தான் ஓடிடியில் இந்த படம் வெளியாகும் எனக் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...