இதுவரை மலையாள படங்கள் செய்யாத சாதனை!.. அசுர வேகத்தில் 100 கோடி கடந்த மஞ்சுமெல் பாய்ஸ்!..

மலையாளத்தில் சிதம்பரம் எஸ்.பொடுவேல் இயக்கத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலை அள்ளியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிற மொழிகளைவிட மலையாளத்தில் மிக எதார்த்தமாக படங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன. அப்படங்கள் பொருமையாக சென்றாலும் அனைவரின் எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துவிடுகின்றன. பிற மொழியினர் கூட மலையாள படத்தை ஒடிடியில் பார்த்து ரசிக்கின்றனர். மேலும் தற்போது வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தியேட்டருக்கே சென்று பார்ப்பது மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்தவர்களையும் சென்று பார்க்க சொல்லி வருகின்றனர்.

100 கோடி வசூல் செய்த மஞ்சுமெல் பாய்ஸ்:

பரவா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், சிதம்பரம் எஸ்.பொடுவேல் இயக்கத்தில் வெளியானது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம். இப்படத்தில் சொபின் ஷாஹிர், ஸ்ரீனாத் பாஷி, பாலு வர்கேஷி, லால், கணபதி, அருண் குரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

2006ம் ஆண்டு கொச்சியை சேர்ந்த சில நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்குள்ள குணா படத்தில் வரும் குகையை சுற்றிப்பார்க்கின்றனர். அப்போது அவர்களில் ஒருவர் பல அடி ஆழம் உள்ள டெவில்ஸ் கிட்சன் என அழைக்கப்படும் குகையின் உள்ளே விழுந்து மாட்டிக்கொள்கின்றார். அவரை உடன் வந்தவர்கள் காப்பாற்றுகிறார்களா இல்லையா, எப்படி மீட்டார்கள் என சாகசங்களை கொண்ட த்ரில்லராக படம் உருவாகியுள்ளது. இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாகும்.

முன்னதாக மலையாளத்தில் ஹ்ருதயம், லூசிஃபர், பிரேமம், மின்னல் முரளி உள்ளிட்ட படங்கள் மட்டுமே அதிக வசுலை பெற்றிருந்த நிலையில் தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் தமிழ் நாட்டில் மட்டும் 15 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. தமிழகத்தில் சில திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பினால் மேலும் பல தியேட்டர்களில் வெளியாகி காட்சிகளையும் கூட்டியுள்ளன.
இதை தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 100 கோடி வசூல் செய்திருப்பது வியப்பாக உள்ளது. நிபந்தனையற்ற அன்பு மிகுந்த அனைத்து ரசிகர்களிக்கும் நன்றி, குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.