160 கோடி வசூலா?.. கோலிவுட்ல இந்த வருஷம் ஒரு படம் கூட 100 கோடி தொடலையே!.. மஞ்சுமெல் பாய்ஸ் மாஸ்!..

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் ஸ்ரீநாத் பாஸி, செளபின் சாஹீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை 160 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக செம மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம் உள்ளிட்ட பெரிய படங்கள் எதுவுமே 100 கோடி வசூல் கூட தொடாமல் சொதப்பிய நிலையில், மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

160 கோடி வசூல்:

அதன் பின்னர் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் அதிகபட்சமாக 160 கோடி ரூபாய் வசூலை உலகம் முழுவதும் ஈட்டி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது. விரைவில் இந்த படம் 200 கோடி வசூலை எட்டும் என தெரிகிறது.

மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் திரைப்படம் விரைவில் 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் மட்டுமே மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 34 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாகவும், இந்த ஆண்டு வெளியான லால் சலாம், ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்கள் கூட இந்த வசூலை எட்டவில்லை என்பது தான் கோலிவுட்டுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியான விஷயமாக மாறி இருக்கிறது.

அடுத்து மலையாளத்தில் தி கோட் லைஃப் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாறன், அமலா பால் அந்த படத்தில் நடித்துள்ளனர்.

மஞ்சுமெல் பாய்ஸ் கதை:

கமல்ஹாசன் நடித்து வெளியான குணா படத்தில் காட்டப்பட்ட கூகுளை கொடைக்கானலில் சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஆனால், அந்தக் குகை மிகவும் ஆபத்தானது என்பதால் அதற்கு உள்ளே செல்லக்கூடாது என்பதற்காக இரும்பு வேலி போட்டு வைத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் நண்பர்கள் கூட்டம் அத்துமீறி உள்ளே நுழைகிறது. அப்படி உள்ளே செல்பவர்களில் சுபாஷ் என்பவர் சைத்தானின் சமையல் அறை என சொல்லப்படும் 900 அடி குழிக்குள் விழுந்து விடுகிறார்.

அவரை யாருமே காப்பாற்ற முடியாது என போலீசார் கைவிரித்த நிலையில், சுபாஷின் உயிர் நண்பர் தனது உயிரையும் துச்சமாக நினைத்து உள்ளே இறங்கி பல கஷ்டங்களை தாண்டி சுபாஷை மீட்டு வெளியே கொண்டு வருவதுதான் இந்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் கதை.

இது புனையப்பட்ட கதையாக இருந்தால் நிச்சயம் இந்த அளவுக்கு ஓடி இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், இது உண்மை சம்பவம் என்பதால் கேரளா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் மற்றும் அந்த படம் வெளியான இடங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் படத்தைப் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த ஸ்ரீநாத் பாசி அடுத்ததாக பா ரஞ்சித் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இரவாக நடிக்க உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதேபோல அந்தப் படத்தை இயக்கிய சிதம்பரம் அடுத்த நடிகர் தனுஷை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...