யூ டியூப் சேனல்களை வறுத்தெடுத்த மஞ்சிமா மோகன்… இப்படி கேவலமா நடந்துக்காதீங்க என காட்டம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ஒரு வடக்கன் செல்பி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சிமா மோகன் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுக்க தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். பின் தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்த போது காத வயப்பட்டு கடந்த ஆண்டு அவரைக் கணவனாகக் கரம் பிடித்தார்.

இந்நிலையில் மஞ்சிமா மோகன் யூ டியூப் சேனல்களைப் பற்றி கருத்து ஒன்றைத் தெரிவித்திருக்கிறார். அண்மையில் செய்தியாளர் சந்தித்திப்பில் மஞ்சிமா மோகன் பேசுகையில், யூ டியூப் சேனல்கள் குறித்தும் அந்த சேனல்களை வைத்திருக்கும் சிலர் நடிகர் நடிகைகளை மிரட்டி வருகின்றனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அடுக்கினார்.

கார்த்தியை கட்டிப் பிடித்து அழுத சூர்யா… இதான் காரணமா? தம்பியுடையான் படைக்கு அஞ்சான்

மேலும் அவர் கூறுகையில் யூ டியூப் சேனல்கள் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கின்றது என்றும் ஆனால் சிலர் தேவையில்லாமல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்றும் மற்றவர்களின் வேலையை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பிறரை பற்றி தவறாக பேசுவது அநாகரீகமான செயல் என்றும் மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் சிலர் யூடியூப் சேனலில் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் வந்த நிலையில் மஞ்சிமா மோகனின் இந்த குற்றச்சாட்டு சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே புளு சட்டை மாறன், வலைபேச்சு அந்தணன், பயில்வான் ரங்கநாதன் போன்றோர் சினிமா பிரபலங்கள் குறித்து அவ்வப்போது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவித்து சர்ச்சையாகி வருவது தொடர்கதையாகி வரும் வேளையில் தைரியமாக மஞ்சிமா மோகன் இதற்கு குரல் எழுப்பியுள்ளது நடிகைகளுக்கு புதிய தைரியத்தைக் கொடுத்துள்ளது.

ஏற்கனவே மன்சூர் அலிகான்-திரிஷா விவகாரத்தில் மன்சூருக்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்தவர் மஞ்சிமா மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.