ஐடி வேலையை உதறிவிட்டு கோலி சோடா கம்பெனி தொடங்கிய நபர்.. மாதம் வருமானம் எவ்வளவு தெரியுமா?

ஐடி வேலையை உதறிவிட்டு கோலி சோடா கம்பெனி தொடங்கிய நபர் மாதம் ஒரு லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தெலுங்கானா மாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த 32 வயதான ரகுநாத் என்பவர் 2020 ஆம் ஆண்டு தனது ஐடி வேலையை ராஜினாமா செய்தார். சொந்தமாக தொழில் தொடங்க அவர் முடிவு செய்த போது அவரது பெற்றோர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாதம் கை நிறைய சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு ரிஸ்க்கான தொழிலை ஏன் தொடங்க வேண்டும் என்று அவர்கள் கூறினார். ஆனால் அவர் தனது வணிக அறிவில் உறுதியாக இருந்தார். சுமார் 30 லட்சம் முதலீடு செய்து அவர் கோலிசோடா தயாரிப்பு விற்கும் தொழிலை தொடங்கினார்.

முதலில் அவர் தனது சொந்த ஊரில் ஒரு சிறிய கடையிலிருந்து கோலி சோடாவை விற்க தொடங்கினார். இந்தியாவில் கோலிசோடா பானத்திற்கு அதிக தேவை இருப்பதை அவர் உணர்ந்தார். இதனை அடுத்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது வணிகத்தை அதிகப்படுத்தி தற்போது ஆன்லைனிலும் விற்பனை செய்து வருகிறார் என்பதும் விநியோகஸ்தர்களின் கூட்டமைப்பையும் அவர் நிறுவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு சில ஆண்டுகளில் ரகுநாத் வியாபாரம் அபரிதமாக வளர்ச்சி அடைந்ததை அடுத்து இன்று அவர் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கு அதிகமாக வருமானம் பார்க்கிறார் என்பதும் அது மட்டும் இன்றி சுமார் 100 பேருக்கு அவர் வேலை தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது நிறுவனத்தை இந்தியாவின் பெற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று கனவுடன் இருப்பவர்களுக்கு ரகுநாத் ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்றும் அவர் தனது தொழிலில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டாலும் வெற்றி அடைய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் தொடங்குபவர்களுக்கு முதலில் ஒரு தெளிவான பார்வை வேண்டும் அந்த பார்வை ரகுநாத்க்கு இருந்தது, கோலிசோடா விற்கும் தொழிலை தொடங்கும் போதே கண்டிப்பாக இது சந்தையில் நன்கு வெற்றி பெறும் என்று நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால்தான் அவர் ஐடி வேலையை ரிஸ்க் எடுத்து ராஜினாமா செய்து விட்டு இந்த தொழிலை தொடங்கினார்.

தொழில் ஒருவேளை நஷ்டம் ஆகிவிட்டால் தனது குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதை உணர்ந்தும் அவர் கடினமாக உழைத்து வெற்றி அடைந்தார். தனது வணிகத்தை மேம்படுத்துவதற்கான தற்போது வழிகளை தேடி வருகிறார். அவர் எப்போதும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டே இருப்பதாகவும் விடாமுயற்சியுடன் இருந்ததால் தான் இந்த வெற்றியை பெற்றதாகவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
Bala S

Recent Posts