மகரம் வைகாசி மாத ராசி பலன் 2024!

மகர ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்ய பகவான் இட அமர்வு செய்கின்றார். திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை வரன் தட்டிப் போதல், எதிர்பார்த்த வரன் கிடைக்காமை என நொந்து போய் இருப்பீர்கள். ஆனால் இந்த மாதம் உங்களுக்கான திருமண வரன் அமைவதோடு திருமண காரியங்களும் விறுவிறுவென நடைபெறும்.

தந்தைவழி ரீதியிலாக நடக்கும் காரியங்கள் சட்டென்று நடந்துமுடிந்துவிடும். மிகப் பெரிய ஏற்றங்களும், அனுகூலங்களும் நிறைந்த காலகட்டம் என்றால் மிகையாகாது.

அரசாங்கப் பதவிகள் கிடைக்கப் பெறும். மனதில் சந்தோஷம் எல்லையற்றதாய் இருக்கும். ஆளுமைத் திறன் மிக்க நபர் உங்கள் வாழ்க்கையில் வருகை தரவுள்ளார்கள்.

நீண்ட காலமாக இருந்துவந்த உடல் தொந்தரவுகள் சரியாகும். மேலும் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். மேலும் உங்களுக்கு இருக்கும் எதிர்பாலின ஈர்ப்பு காதலாக மாற வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியத்துக்குக் காத்திருக்கும் தம்பதியினருக்கு நிச்சயம் குழந்தை பாக்கியமானது கிடைக்கப் பெறும்.

சமூகத்தில் உங்களின் மதிப்புநிலையானது அதிகரிக்கும். செவ்வாய் பகவானும்- சுக்கிர பகவானும் கூட்டணி அமைத்து இருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் எந்தவொரு விஷயத்தையும் எதிர்கொள்வீர்கள். தொழில்சார்ந்து அபிவிருத்தி செய்தல், புதிய தொழில் துவங்குதல் என அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கிப் பயணம் செய்வீர்கள்.

பொருளாதார ஏற்றம் 90 சதவிகித அளவில் இருக்கும். வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்குதல், வீட்டிற்குத் தேவையான எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்குதல், தங்கநகை முதலீடு என பொருள் சேர்க்கை சிறப்பாகவே இருக்கும்.

பூர்விகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் சமாதானத்திற்கு வரும். பல ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று படையலிட்டு வழிபாடு செய்வீர்கள்.

நாமக்கல் ஆஞ்சநேயர் வழிபாடு மிகப் பெரும் ஏற்றத்தையும் அனுகூலத்தையும் கொடுப்பதாய் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews