மகரம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள்.. இனி எதிலும் வெற்றி தான்!

மே மாதம் ஒன்றாம் தேதி அதாவது சித்திரை 18 ஆம் தேதி மாலை 5:20 மணி அளவில் குரு பெயர்ச்சி நடக்கிறது. இதன் மூலம் மேஷ ராசியில் இருந்து குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த குரு பெயர்ச்சியால் மகரம் ராசிக்கான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மகரம் ராசிக்கு 3 மற்றும் 12ஆம் இடத்திற்கு அதிபதியாக இருப்பவர் குரு பகவான். இதனால் மகரம் ராசி அன்பர்கள் அனைவரிடத்திலும் அன்புடன் பழகுபவர்களாக இருப்பார்கள். இவ்வளவு காலம் மகரம் ராசிக்கு குரு பகவான் நான்காம் இடத்தில் இருந்தார்.

இதனால் உறவினர்களிடம் பகை ஏற்பட்டிருக்கும். வெற்றி கிடைப்பது என்பதே பெரும் பாடாக இருந்திருக்கும். இந்நிலையில் குரு பெயர்ச்சி ஆகி ஐந்தாம் இடத்திற்கு செல்கிறார். மூன்றாம் இடத்திற்கு அதிபதியான குரு ஐந்தாம் இடத்திற்கு செல்வதால் சகோதர சகோதரிகள் இடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் மாறும்.

சக ஊழியர்களிடம் மதிப்பு உயரும். அதேபோன்று 12ஆம் இடத்திற்கு அதிபதியான குரு ஐந்தாம் இடத்திற்கு வருவதால் தேவையற்ற செலவுகள் குறையும். உங்கள் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்கள் உங்களை விட்டு விலகும் படியான சூழல் உருவாகும்.

குரு பகவான் தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் பலன்களை கொடுத்தாலும் அவரது பார்வை எப்போதும் நல்லதாகவே அமையும். அவ்வகையில் குரு பகவானின் நேர் பார்வை மகரம் ராசிக்கு பதினோராம் இடத்தில் விழுகிறது. இதனால் பதவி உயர்வு கிடைக்கும்.

செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குரு பகவான் ஐந்தாம் பார்வையாக மகரம் ராசிக்கு 9 ஆவது இடத்தை பார்க்கும் போது உயர் அதிகாரிகளிடம் மதிப்பு உயரும். ஆன்மீக யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.

அதேபோன்று குருவின் ஒன்பதாவது பார்வை ஜென்ம ஸ்தானத்தில் விழும் போது ஆரோக்கியம் மேம்படும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். வருமானம் இரட்டிப்பாகும். மேலும் கூடுதல் பலன்களைப் பெற மகான்களை வணங்குவது சிறப்பு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews