மகரம் ஐப்பசி மாத ராசி பலன் 2022!

மகர இராசியினைப் பொறுத்தவரை சனி பகவான் இராசியிலேயே ஆட்சியில் உள்ளார். இதுவரை இருந்த மனக் குழப்பங்கள் மற்றும் கஷ்டங்கள் சரியாகும்.

தொழில்துறையில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். இதுவரை வராத பணம் வந்து சேரும். ராசிக்கு 3 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

உடன் பிறந்தோருக்கு அனுகூலமான மாதமாக இருக்கும். ராசிக்கு 4 ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளார். தாயின் ஆரோக்கியத்தில் பின்னடைவு இருக்கும்.

மாணவர்கள் கல்வி நலனில் மேம்பட்டு இருப்பார்கள். சுக்கிரன் ராசிக்கு 10 ஆம் இடத்தில் இருப்பதால் பூர்விகச் சொத்துகள் ரீதியாக சுப செய்தி கிடைக்கும். ராசிக்கு 6 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் புது வேலை தேடுவோருக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.

ஏற்கனவே வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். தொழில்துறை ரீதியாக லாபம் கிட்டும், வாங்கிய பழைய கடனை அடைத்து முடிப்பீர்கள்.

ராசிக்கு 7 ஆம் இடத்தில்  குருவின் பார்வை இருப்பதால் கணவன்- மனைவி இடையேயான பிரச்சினை சரியாகும். மனைவியின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்.

ராசிக்கு 10 ஆம் இடத்தில் சூர்யன் நீச்சம் பெறுகிறார், தொழில்ரீதியாக பெயரும் புகழும் கிடைக்கப் பெறும். ராசிக்கு 9 ஆம் இடத்தில் புதன் இருப்பதால் தந்தைவழியாக பண வரவுகள் இருக்கும். வீட்டில் இதுவரை எதிர்பார்த்து இருந்த சுப காரியங்கள் நடந்தேறும்.

விநாயகரை வழிபட்டு வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews