மதுரையிலும் பஞ்சபூத தலங்கள் இருக்குன்னு தெரியுமா?



பஞ்சபூத தலங்கள் எவைன்னு கேட்டால் காஞ்சிபுரம், சிதம்பரம்,திருவண்ணாமலை, திருவாணைக்காவல், காளஹஸ்தின்னு எல்லாருக்குமே தெரியும்.

ஆனா, கோயில் நகரமான மதுரையிலேயே பஞ்சபூதத்தலங்கள் உள்ளதை நம்மில் பல பேர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் அனைத்து கோவில்களையும் ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் மிகவும் அருஅருகைமையில் உள்ளதுன்னு சொன்னால் நம்பவும் மாட்டீங்க. அவை எவைன்னு தெரிஞ்சுக்கலாமா?!

1. நீர் ஸ்தலம் – மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோவில்.

2.ஆகாய ஸ்தலம் – சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில்.

3. நில ஸ்தலம் – இம்மையில் நன்மை தருவார் கோவில்.

4. நெருப்புஸ்தலம் –
தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில்.

5. காற்று ஸ்தலம் – தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில்.

ஆகியவை மதுரையிலேயே உள்ள பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளார்.

மதுரையிலிருக்கும் பஞ்சபூத தலங்களை பற்றி இப்ப தெரிஞ்சுக்கிட்டீங்கல்ல?! உடனே கிளம்பி சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லா வளமும் பெறுவீர்கள்!!

Published by
Staff

Recent Posts