விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்.. லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிரங்கமாக விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜிடம் தான் தெரியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டிருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது.

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அடுத்த்தாக நானும் ரவுடி தான் படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அந்த படத்தில் நடித்த நடிகை நயன்தாராவை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். உயிர் மற்றும் உலகம் என இரு ஆண் குழந்தைகள் இந்த நட்சத்திர தம்பதியினருக்கு உள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன்:

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்த அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில், விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்காமல் நடிகர் அஜித் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டார்.

அடுத்ததாக, லவ் டுடே படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன்.

தவறாக போட்ட லைக்:

இந்நிலையில், எப்போதுமே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள விக்னேஷ் சிவன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வீடியோ ஒன்றுக்கு லைக் போட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. லோகேஷ் கனகராஜுக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே சண்டை என வதந்தி ஒன்று வைரலாகி வந்த நிலையில் அது தொடர்பான வீடியோவுக்கு விக்னேஷ் சிவன் லைக் போட்டிருந்தார்.

சில ரஜினி ரசிகர்கள் அதை ஷேர் செய்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இடையே சண்டை இருப்பது உண்மைதான் என்பதை தெரிந்து கொண்டுதான் விக்னேஷ் சிவன் இப்படி ஒரு லைக்கை பதிவிட்டுள்ளார் என ஏகப்பட்ட போஸ்ட்களை போட, அதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவி நயன்தாராவை கேவலமாக திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்:

அதை பார்த்து விக்னேஷ் சிவன் தான் எங்கே தவறு செய்தோம் என்பதை உணர்ந்து கொண்டு, அதற்கான நீண்ட விளக்கத்தை நேற்று இரவே கொடுத்துவிட்டார். லோகேஷ் கனகராஜின் புகைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டு லைட் போட்டு விட்டதாகவும் உள்ளே உள்ள கன்டன்ட்டை கவனிக்கவில்லை என்றும் இது தான் தெரியாமல் செய்த சில்லி மிஸ்டேக் தான் என குறிப்பிட்டு இருந்தார். மேலும், நடிகர் விஜய் ரசிகர்களுக்கும், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் தான் தெரியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்வதாக பதிவிட்டிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னார்?:

இந்நிலையில், லியோ படத்திற்காக தீவிரமாக புரமோஷன் செய்து வரும் லோகேஷ் கனகராஜ், தனது பிஸியான ஷெட்யூலிலும் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டது அறிந்து கொண்டு உடனடியாக ட்விட்டர் பக்கத்தில் ”சில் ப்ரோ” என பதிவிட்டு அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை ஃபிரியா விடுங்க எனக் கூறியுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...