ஆர்.ஜே பாலாஜியுடன் களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்!! ஆக்டிங்லயும் கிங்கா இருப்பாரா?

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடித்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். இப்படம் நவம்பர் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் சலூன் படத்தின் இயக்குனர் கோகுல் இதற்கு முன் ரெளத்திரம், இதற்குதானே ஆசைபட்டாய் பால குமாரா, காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கியவர். இதில் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, பெரும் வரவேற்பைப் பெற்றபடம். அது போல ஆர்.ஜே பாலாஜி நடித்து தற்போது உருவாகி இருக்கும் சிங்கப்பூர் சலூனும் காமெடி கலாட்டாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.ஜே பாலாஜி தொடர்ந்து மக்களை கவரும் வகையிலான படங்களில் நடித்து வருகிறார். படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் இருவருமே டைமிங் காமெடிக்கு பஞ்சம் இல்லாதவர்கள் அப்படிபட்டவர்கள் ஒன்றாக இணைந்திருக்கும் இந்த கூட்டணியின் படைப்பு எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

‘தளபதி 68ல்’ ஹீரோயினாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருக்கிறார். முதல் நீ முடிவும் நீ படத்தின் ஹீரோ கிஷன் தாஸ் மேலும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் முக்கியமான ஒருவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார். விக்ரம், லியோ என தொடர்ந்து மாஸ் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ்.

படத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹேர் ஸ்டைலிஸ்டாக வருகிறார் அவரின் வாடிக்கையாளராக வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். படத்தில் ஒரு செலிபிரட்டி இந்த காட்சியில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த போது, விஜய் சேதுபதியைதான் பலரும் இயக்குனரிடம் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

rj balaji singapore saloon

ஆனால் இயக்குனருக்கோ பல செலிபிரிட்டிகளை இயக்கி வரும் லோகேஷை நடிக்கவைத்தால் என்ன என்று தோன்றி இருக்கிறது. லோகேஷ் கனகராஜூம், கோகுலும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால், உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார் LCUவிற்கு சொந்தக்காரர்.

லோகேஷ் தவிர்த்து படத்தில் மேலும் ஒரு செலிபிரிட்டி நடித்திருப்பதாகவும், யார் அவர் என்பதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் படத்தின் இயக்குனர் கோகுல் தெரிவித்துள்ளார். அந்த செலிபிரிட்டி வரக்கூடிய 10 நிமிடமும் படுபயங்கராமான கைத்தட்டலை பெரும் என்று எதிர்பார்ப்பதாகவும் பேட்டி ஒன்றில் கோகுல் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews