சண்டக்கோழி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இருந்த நம்பர் 1 பாலிவுட் நடிகை.. ஒரே ஒரு காரணத்துக்காக நோ சொன்ன லிங்குசாமி

ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. மம்மூட்டி, முரளி, ஸ்னேகா, ரம்பா, தேவயானி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சிறந்த ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி இருந்ததால் குடும்பங்களுடன் திரை அரங்கம் வந்து ஆனந்தம் படத்தை கொண்டாடி இருந்தனர். இதனால், முதல் படத்திலேயே சிறந்த இயக்குனராக தன்னை முன்னிறுத்தி கொண்டார் இயக்குனர் லிங்குசாமி.

முதல் படத்தில் இருந்து அப்படியே மாறுபட்டு தான் பின்னர் படங்களை இயக்கினார் லிங்குசாமி. மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த ‘ரன்’ திரைப்படம் அவரது இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படமாகும். இந்த படம் சண்டைகாட்சிகள் மற்றும் கமர்சியல் அம்சங்கள் நிறைந்த பொழுது போக்கு படமாகவும் உருவாகி இருந்தது. படமும் பெரிய வெற்றி பெற, படத்தின் பாடல்கள் மற்றும் விவேக்கின் காமெடி காட்சிகள் எவர்க்ரீனான ஒன்றாகும்.

இதனையடுத்து, அஜித் குமாரை வைத்து ஜி என்ற படத்தை இயக்கி இருந்தார். இதன் பின்னர் விஷாலை வைத்து லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி படம் தான் அவரது திரை பயணத்தில் சிறந்த படம் என பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. விஷாலுடன் மீரா ஜாஸ்மின், லால், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவே சண்டக்கோழி திரைப்படம் இருக்க, பெரிய வெற்றியையும் இந்த படம் பெற்றிருந்தது.

இதற்கடுத்து, விக்ரம், கார்த்தி, சூர்யா என பல முன்னணி நடிகர்களை இயக்கவும் செய்திருந்தார் லிங்குசாமி. இதில் சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கிய அஞ்சான் என்ற திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, அதிகம் விமர்சனத்தை சந்தித்திருந்தது. ஸ்டைலிஷான சூர்யா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அஞ்சான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. அதே போல, பட ரிலீசுக்கு முன்பாக லிங்குசாமியும் அஞ்சான் படம் பற்றி மிகையான கருத்துக்களை சொல்ல, ரசிகர்களும் படத்திற்காக தயாராகி, பின்னர் சற்று ஏமாற்றமும் அடைந்திருந்தனர்.

அஞ்சானுக்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் உருவான சண்டக்கோழி 2 மற்றும் வாரியர் ஆகிய திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதற்கிடையில், சில படங்களை லிங்குசாமி தயாரிக்கவும் செய்துள்ளார். இந்த நிலையில், லிங்குசாமியின் சிறந்த படம் என கொண்டாடப்படும் சண்டக்கோழி படத்தில், மீரா ஜாஸ்மினுக்கு பதிலாக நம்பர் 1 பாலிவுட் நடிகையை தான் முதலில் நடிக்க வைக்க லிங்குசாமி விருப்பப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக லிங்குசாமி பேசி இருந்த நேர்காணல் ஒன்றில், ‘சண்டக்கோழி படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க தான் முதலில் விரும்பினேன். இது தொடர்பாக அவரை சந்தித்து பேசிய போது, அவர் கேட்ட சம்பளம் அதிகமாக இருந்தது. இந்த ஒரு காரணத்திற்காக தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கும் ஆசையை கைவிட்டோம். பின்னர் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்’ என தெரிவித்திருந்தார்.
Deepika_Padukone

ஆனால், சண்டக்கோழி படத்தில் நடித்த மீரா ஜாஸ்மின், தமிழ் சினிமாவில் நடிகை கதாபாத்திரங்களில் மிக முக்கிய கதாபாத்திரமாகவும் அதனை தனது நடிப்பால் மாற்றி ரசிகர்களையும் கட்டிப் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.