ரீல் எல்ஐசி-க்கு செக் வைத்த ரியல் எல்ஐசி.. குழப்பத்தில் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் ஆங்கில தலைப்பு வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சில படங்கள் வியாபார உத்திக்காகவும், மக்களிடம் எளிதில் சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் ஆங்கில தலைப்புகளை வைக்கின்றனர். அண்மையில் வெளியான Jailer படப்பிடிப்பில் இருக்கும் Thug Life, G.O.A.T., என உச்ச நட்சத்திரங்களின் படங்களும் இதற்கு தகுந்த உதாரணம் எனலாம்.

இந்நிலையில் நீளமான படங்களின் பெயரை ஷார்ட்டாக கூறி அழைக்கப்படுவது வழக்கம். அழகிய தமிழ் மகன் படத்தை ATM எனவும், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை VTV எனவும், எதற்கும் துணிந்தவன் படத்தை ET எனவும் அழைத்தால் தான் அப்படங்கள் ரசிகர்களிடம் எளிதில் புரியும்.

இதேபோல் தான் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்திற்கும் LIC என்று பெயரிடப்பட்டுள்ளது. லவ்டுடே வெற்றிப் படத்திற்குப் பின் பிரதீப் ரங்கநாதன் யாருடன் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிரதீப் ரங்கநாதன், நயன்தாராவுடன், பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சீமான் நடிக்கிறார்.

இந்தி திணிப்பு கேள்விக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி : அதிர்ந்து போன நிருபர்

LIC படத்திற்கான விளக்கம் LOVE INSURANCE CORPORATION என்று விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது இதுதான் பூகம்பமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏற்கனவே LIC என்ற பெயரில் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செயல்படுவதால் LIC படத்திற்கு இதனால் சிக்கல் எழுந்துள்ளது.

LIC நிறுவனம் இது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு LIC அனுப்பியுள்ள நோட்டீசில் LIC என்ற பெயரை பயன்டுத்துவதை நிறுத்தக் கோரியும், ஏழு நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIC நிறுவனத்தின் இந்த எச்சரிக்கையால் ரீல் LIC படக்குழு அதிர்ந்து போயுள்ளது. இந்தத் தலைப்பு அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் LIC நிறுவனத்தின் இந்த எச்சரிக்கையால் பட நிறுவனமும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் வேறு தலைப்பை மாற்றுவதா அல்லது அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...