குணத்தால் உயர்ந்த எஸ்.எஸ்.வாசன்.. தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

நாதஸ்வர வித்வான் ‘சிக்கல்‘ நாதஸ்வர சக்கரவர்த்தி சண்முக சுந்தரமாக நடிகர் திலகமும், மோகனாம்பாளாக நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் ஆன படம்தான் தில்லானா மோகனாம்பாள். 1968-ல் வெளிவந்த இந்தப் படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது. ஒரு கைதேர்ந்த நாதஸ்வர வித்வானாக சிவாஜிகணேசன் ஒவ்வொரு காட்சியிலும் நடித்து அசத்தியிருப்பார். மேலும் மனோரமாவுடன் காமெடியும் படத்திற்குப் பக்கபலமாக அமைந்தது.

கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றுவரை பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன. ‘நலந்தானா..‘ ‘மறைந்திருந்து பார்க்கும்…‘ போன்ற காலத்தால் அழியாத காவியப் பாடல்களைப் படைத்தார் கண்ணதாசன். மேலும் இந்தப் படத்தின் வசனங்கள் இசைத் தட்டுகளிலும், ஆடியோ கேசட்டுகளிலும் கோவில் திருவிழாக்கள், பல மேடை நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பாகி பிரபலம் அடைந்தது.

இந்தப் படத்திற்கான கதையை எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு. தமிழ் திரையுலகின் கதை ஜாம்பவானாக விளங்கிய கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதிய தில்லானா மோகனாம்பாள் கதையை ஆனந்த விகடனில் தொடராக எழுதி வந்தார். இந்தக் கதையின் உரிமை எஸ்.எஸ்.வாசனிடம் இருந்தது. இதனைப் படமாக்க விரும்பிய பழம்பெரும் இயக்குநர் ஏ.பி.நாகராஜன், எஸ்.எஸ்.வாசனைச் சந்தித்து அதற்கான அனுமதியைக் கேட்டிருக்கிறார்.

’16 வயதினிலே’ படத்திற்காக கமல் கேட்ட சம்பளத்தால் அதிர்ந்த பாரதிராஜா.. ஆனா ரஜினிக்கு எவ்ளோ கொடுத்தாங்க தெரியுமா?

இக்கதையை தான் படமாக்க விரும்பி இரண்டு முறை ஏ.பி.நாகராஜனின் கோரிக்கையை மறுத்த எஸ்.எஸ்.வாசன், மூன்றாவது முறையாக அவருக்கே தில்லானா மோகனாம்பாள் கதையைப் படமாக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறார். இதற்காக ஏ.பி.நாகராஜன் எஸ்.எஸ்.வாசனுக்கு கதைக்கான பணம் எவ்வளவு என்று கேட்க 25 ஆயிரம் என்று கூற அதை ஏ.பி.என் கொடுத்திருக்கிறார்.

பின்னர் எஸ்.எஸ்.வாசன் 50 ஆயிரமாவது கேட்பார் என்று எண்ணிய நிலையில் 25 ஆயிரம் மட்டுமே பெற்றுக் கொண்டார் எஸ்.எஸ்.வாசன். எனவே மீதமிருந்த 25 ஆயிரம் ரூபாயை இந்தக் கதையை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவிற்குக் கொடுக்கலாம்என்று எண்ணி அவரைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவர் சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவரிடம் இந்தப் பணத்தைக் கொடுக்க அவர் மறுத்திருக்கிறார். ஏனெனில் அப்போது தான் எஸ்.எஸ்.வாசன் அவரைச் சந்தித்து 25 ஆயிரம் பணத்தைக் கொடுத்துச் சென்ற விஷயத்தினைக் கூறியிருக்கிறார். உடனே திகைத்துப் போயிருக்கிறார் ஏ.பி.நாகராஜன். அவரின் உயர்ந்த உள்ளத்தினைக் கண்டு வியந்து போய் தான் கொண்டு வந்த 25 ஆயிரம் பணத்தினையும் அவரிடமே கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார் ஏ.பி.நாகராஜன்.

அதன்பின் அவரே தயாரித்து தில்லானா மோகனாம்பாள் படத்தினை இயக்கினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews