அசைவ உணவில் இருந்து சைவ உணவுக்கு மாறிய லெபனான் நாட்டு மக்கள்.. காரணம் கேட்டு ஷாக் ஆகாதீங்க!

லெபனான் நாடானது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். லெபனான் சுமார் ஆறு மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட நாடாக உள்ளது. உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லெபனானில் தற்போது பொருளாதார நெருக்கடி தாண்டவமாடுகின்றது.

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் அதிக அளவில் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்தன. அந்தவகையில் லெபனான் நாடும் பெரும் பொருளாதார நெருக்கடி ஆளாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் உள்ள நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அநாவசியப் பொருட்கள் பலவற்றினைக் குறைத்துக் கொண்ட மக்கள், அந்த லிஸ்ட்டில் அசைவ உணவுகளையும் சேர்த்துவிட்டனர் என்றால் பாருங்கள்.

ஆமாங்க அசைவ உணவுகளை வாங்க முடியாத சூழ்நிலையால் சைவ உணவுகளைச் சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பலரும் சைவ உணவுகளுக்கு மாறிவிட்டனராம், எஞ்சிய சிலரோ வாரத்தில் ஒருநாள் மட்டும் அசைவ உணவு சாப்பிடுவது என்று முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

Published by
Gayathri A

Recent Posts