கண்ணீருடன் கெஞ்சிய லதா மங்கேஷ்கர்.. அடுத்த நிமிஷமே சிவாஜி கணேசன் எடுத்த சபதம்.. வியந்து பார்க்கும் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் நடிப்பில் இவர் தொட்ட இடத்தை இன்னொருவர் தொட முடியாது என்ற வகையில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் நடிகராக ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் கோர்ட் காட்சியில் அவர் வசனம் பேசிய காட்சிகள், இன்று வரையிலும் பல சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் காட்சியாகும். பராசக்தி தொடங்கி தனது திரை பயணம் முழுவதும் சிவாஜி கணேசன் நடித்த கதாபாத்திரங்களில் அவர் வாழ்ந்து விட்டு சென்றார் என்றே சொல்லலாம்.

சுமார் 5 தலைமுறைக்கு மேல் திரைப்படங்களில் நடித்து வந்த சிவாஜி கணேசன், தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏறக்குறைய 300 படங்கள் வரை நடித்துள்ளார். தமிழக அரசின் விருதுகள் தொடங்கி சர்வதேச விருதுகள் வரை வென்றுள்ள சிவாஜி கணேசனின் நடிப்பு திறன், இன்று சினிமாவில் நடிகனாகி சாதிக்கத் துடிக்கும் பலருக்கும் ஒரு ஊந்துகோல் என்று தான் நிச்சயம் சொல்ல வேண்டும்.

அதே போல, எம்ஜிஆர், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, விஜய், மோகன்லால் என பல தலைமுறையின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததே சிவாஜியின் திரை பயணத்தில் மிகப் பெரும் பெருமையாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ஒரு பெரிய ஆட்சியே நடத்திய சிவாஜி கணேசன், கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மண்ணுலகை விட்டு மறைந்தார். ஆனாலும், இன்னும் அவரது நடிப்பு, சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் என எங்கும் உயிர்பெற்று கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக விளங்கிய லதா மங்கேஷ்கர், கண்ணீர் மல்க ஒரு கோரிக்கையை சிவாஜி கணேசனிடம் வைக்க, அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட மாற்றம் தொடர்பான செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தமிழ் தொடங்கி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பாடியுள்ள லதா மங்கேஷ்கர், ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனை புரிந்துள்ளார். அவர் தனது 92 ஆவது வயதில் கடந்த 2022 ஆம் ஆண்டு மறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இவருக்கும் சிவாஜி கணேசனுக்குமான நட்பு பலரும் அறிந்தது தான். சென்னையில் எப்போது லதா மங்கேஷ்கர் வந்தாலும் அவர் சிவாஜி கணேசன் வீட்டில் தான் தங்குவார். சிவாஜி வீட்டில் லதா தங்கியிருந்த போது, அங்கே ஏராளமான குயில்கள் அடைக்க வைக்கப்பட்டிருந்தது. இதனை கவனித்த லதா, அதற்கான காரணம் பற்றி சிவாஜியிடம் கேட்டுள்ளார்.

குயில் கறி பிரியரான சிவாஜி கணேசன் உண்பதற்கு தான் என கூற, அதிர்ச்சி அடைந்து போனார் லதா மங்கேஷ்கர். இதனை கேட்டதும் கண்ணீர் வடித்த லதா மங்கேஷ்கர், தயவு செய்து அனைத்து குயில்களையும் திறந்து விடும்படி கோரிக்கை வைக்க, அதை ஏற்றுக் கொண்டு அனைத்திற்கும் விடுதலை கொடுத்தார் சிவாஜி கணேசன்.

அது மட்டுமில்லாமல், லதா மங்கேஷ்கர் கண்ணீர் சிந்தியதால் அந்த நாளில் இருந்து குயில் கறி சாப்பிடமாட்டேன் என்றும் சிவாஜி கணேசன் சபதம் எடுத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews