கட்சிக்காக பணம் கொடுத்த நடிகை லதா…. திருப்பி எம்ஜிஆர் செய்த உதவி..!!

மக்கள் திலகம் எம்ஜிஆர் கடந்த 1972 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கி முதலில் சந்தித்த தேர்தலிலே வெற்றி பெற்று முதலமைச்சரானார். அதன் பிறகு அவர் சாகும் வரை முதலமைச்சராகவே இருந்தார்.

ஆனால் அவர் முதல் முதலில் கட்சி ஆரம்பித்து, முதல் தேர்தலை சந்தித்தபோது அவருக்கு ஏராளமான பண நெருக்கடி இருந்ததாகவும், அதில் அவருக்கு பலர் உதவி செய்த நிலையில் அவரது கட்சிக்காக நடிகை லதா பணம் கொடுத்ததாகவும் தெரிகிறது.

இது குறித்து லதா ஒரு பேட்டியில் கூறிய போது எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்தித்தபோது நிதி நெருக்கடியில் இருந்தார். அப்போது நான் சாகுந்தலம் என்ற நாடகத்தை நடத்தி அந்த நாடகத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 32 லட்சம் ரூபாய் கொடுத்தேன். 45 ஆண்டுகளுக்கு முன் நான் கொடுத்த 32 லட்சம் இன்று பல கோடிக்கு சமம் என்றும் அந்த பேட்டியில் லதா தெரிவித்திருந்தார்.

முன்னணி நிறுவனங்கள் தயாரித்த முதல் கலர் படங்கள்…. எல்லாத்திலும் எம்ஜிஆர் தான் ஹீரோ..!!

அந்த பணத்தை எம்ஜிஆர் என்னிடம் வாங்கும்போது நான் எத்தனையோ பேருக்கு பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறேன், ஆனால் நீ எனக்கு இப்போது கொடுக்கிறாயா? என்று கிண்டலாக கூறியதாகவும் அதை என்னால் இப்போதும் கூட மறக்க முடியாது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் தான் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த போது எம்ஜிஆர் தான் உதவினார் என்றும் அவர் செய்த உதவி நான் கொடுத்த 32 லட்சத்தை விட பெரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த 1986ஆம் ஆண்டு லதாவின் தாயார் உடல் நலம் இன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், லதாவின் அம்மா உடல்நிலை குறித்து கேள்விப்பட்டதும், உடனே மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். என்னிடம் ஏன் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று உரிமையுடன் கோபப்பட்ட எம்.ஜி.ஆர், உடனடியாக மருத்துவர்களை அழைத்து லதாவின் அம்மாவுக்கு தேவையான சிகிச்சைகளை செய்ய வேண்டும் என்றும், அதற்கு தேவையான செலவு முழுவதும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

“நீ என் தங்கச்சி மாதிரி” ஜெயலலிதாவை பார்த்து எம்ஜிஆர் சொன்ன வசனம்… தியேட்டரில் சிரிப்பு அலை..!!

இருப்பினும் லதாவின் அம்மா உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார். அப்போது லதாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருந்தது எம்ஜிஆர் தான் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் லதாவின் அம்மா சென்னையில் ஒரு பங்களா போன்ற வீட்டை கட்டிக் கொண்டு இருந்தார். அப்போதுதான் அவர் திடீரென இறந்து விட்டதால் அந்த வீட்டை எப்படி முடிப்பது? குடும்பத்தை எப்படி நிர்வாகம் செய்வது? என்று தெரியாமல் லதா இருந்ததாகவும், அந்த சமயத்தில் எம்ஜிஆர், நான் உதவி செய்கிறேன் என்று தானாகவே வந்து அந்த வீட்டை கட்டி முடிக்க தேவையான முழு பணத்தையும் கொடுத்ததகவும் லதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நான் 1977-ல் அதிமுக கட்சிக்காக கொடுத்த பணத்தைவிட அதிகமாக தான் எனக்கு திருப்பி அவர் வீட்டை கட்டி முடிக்க செலவு செய்தார் என்றும் வீட்டை கட்டி முடிக்க செய்த செலவு அவர் திருப்பி கேட்கவே இல்லை என்றும் லதா தெரிவித்ததாகவும் கூறப்படுவதுண்டு.

எம்ஜிஆர் நடித்த சில காட்சிகள்… முழு படத்தை தயார் செய்த ஜேப்பியார்..!

திரையுலகில் லதாவை அறிமுகப்படுத்தியதே எம்ஜிஆர். உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் லதாவை எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய நிலையில் அதன் பிறகு இன்று நாளை, சிரித்து வாழ வேண்டும், உரிமை குரல், பல்லாண்டு வாழ்க, நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், நீதிக்கு தலைவணங்கு, உழைக்கும் கரங்கள், மீனவ நண்பன், நவரத்தினம் மற்றும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே கிட்டத்தட்ட சூப்பர் ஹிட் ஆகியது.

Published by
Bala S

Recent Posts