ரஜினிகாந்தின் லால் சலாம்!.. 3வது நாளிலாவது முன்னேறியதா?..

முதல் முறையாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியானது. முதல் இரண்டு நாள் வசூல் டல் அடித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வசூல் அதிகர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை வசூல் மேலும், சரிவடைந்து இருப்பதாக கூறுகின்றனர்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட் மற்றும் அரசியலை மையமாக வைத்து இந்த படம் உருவானது. ஆனால், முன்னதாக பா. ரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்து ஜனவரி மாதம் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்திலும் கிரிக்கெட் மற்றும் ஜாதி அரசியல் இடம்பெற்றது. அந்தப் படம் முதலில் வெளியான நிலையில், லால் சலாம் படத்துக்கு பெரிய இடியாக வசூலில் மாறும் என எதிர்பார்க்கப்பட்டதை போலவே இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.

லால் சலாம் 3வது நாள் வசூல்:

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ‘3’ படமே தனக்கு தோல்வி படம் தான் என்றும் அதற்கு அனிருத்தின் இசை தான் காரணம் என சமீபத்தில் வாய் விட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாட்டிக் கொண்டார். அதன் பின்னர் அவர் கெளதம் கார்த்திக்கை வைத்து இயக்கிய வை ராஜா வை படமும் பெரிய ஃபிளாப். அதற்கு மேல் டைரக்‌ஷன் பக்கமே போகாதே என தனுஷ் போட்ட கண்டிஷன் தான் அவர் இயக்காமல் இருந்ததாக கூறுகின்றனர். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்க முடிவு செய்த ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் தடையாக இருந்த நிலையில் தான் அவரை பிரிந்து விட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன.

மேலும், லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் இந்த படம் தேசிய விருது வாங்கும் என ரஜினிகாந்த் பேசியது படத்திற்கு எதிர்பார்ப்பை கொடுக்காமல் எதிர்வினை ஆற்றியது. எங்கப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேச அயோத்தியில் ராமர் கோயிலுக்கு ரஜினிகாந்த் சென்றது என ஏகப்பட்ட குழப்பமான சூழல் லால் சலாம் படத்தை ரசிகர்களுக்கு சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் 4.3 கோடி ரூபாய் வசூல் அள்ளியது. 2ம் நாளில் 3 கோடி ரூபாயும் 3ம் நாளான சன் டே 3 கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக இதுவரை 10 கோடி ரூபாய் வசூலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கேமியோ ரோலில் ரஜினிகாந்த், கபில் தேவ் நடித்த லால் சலாம் படம் அள்ளியிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews