கும்பம் ஆடி மாத ராசி பலன் 2022!

ஜென்ம சனி இனி விரயச் சனியாக மாறப் போகிறார், தொழில் ரீதியாக இதுவரை இருந்த மந்தநிலையானது மாறும். வேலைவாய்ப்பின்மையால் திண்டாடுபவர்களுக்கு ஒரு வழியாக வேலையானது கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் முயற்சிகள், தொழில் அபிவிருத்தி போன்ற விஷயங்கள் ஒரு மாத காலகட்டத்திற்கு தள்ளி வைக்கவும். எடுத்த காரியம் அனைத்திலும் தடை என்ற நிலையில் இருந்து ஓரளவு மீள்வீர்கள்.

பல ஆண்டுகளாக இருந்த பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் பெரும் பூதாகர பிரச்சினையாக மாறும். கோர்ட் வழக்குகளில் இழுபறி நீடிக்கும். கடன் தொல்லையால் மன நிம்மதி இழப்பதோடு குடும்பத்திலும் பிரச்சினை நீடிக்கும்.

கணவன்- மனைவி இடையேயான பிரச்சினைகள் வலுப்பெறும். சுப காரியங்களால் மீண்டும் கடன் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். திருமணம் சார்ந்த விஷயங்களால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். குழந்தைப் பேறு வேண்டுபவர்களுக்கு அனுக்கிரகம் கிடைக்கப் பெறும்.

பெற்றோர் உடல் நலனில் மிகச் சிறந்த முன்னேற்றம் காணப்படும். உடன் பிறப்புகளால் குடும்பத்தில் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.