சினிமா தான் இனி என் ரூட்.. 14 வயசுல படிப்பை நிறுத்தி நடிக்க வந்த குமாரி ராதா.. எம்ஜிஆர், சிவாஜியுடன் ஜோடி சேர்ந்த கதை…

எம்ஜிஆர், சிவாஜி உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்த பிரபல கன்னட நடிகை குமாரி ராதா. இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். கன்னடத்தில் பிவி ராதா என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்த இவர், தமிழுக்காக குமாரி ராதா என்று பெயரை மாற்றிக் கொண்டார். இதே பெயரில் தான் அவர் தெலுங்கிலும், மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருந்தார்.

1948 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த குமாரி ராதாவின் இயற்பெயர் ராஜலட்சுமி. சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக, இவர் 14 வயதில் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு நடிகை ஆனார். 1964 ஆம் ஆண்டு அவரின் முதல் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் தான் அவரது பெயர் பிவி ராதா என்று மாற்றப்பட்டது.

bv radha

பிவி ராதா என்ற பெயரில் தான் அவர் ஏராளமான கன்னட படங்களில் நடித்தார். அதே போல, இவர் அணைத்து பிரபல கன்னட நடிகர்களுடனும், தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக எம்ஜிஆர், சிவாஜி, என்டி ராமராவ், ஜெமினி கணேசன், நாகேஸ்வரராவ், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் இவர் ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழில் கடந்த 1965 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த ’தாழம்பூ ’என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அந்த படத்தில் அவர்  காவேரி என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். இதனை அடுத்து ஜெய்சங்கர் நடித்த ’யார் நீ’  ’காதல் படுத்தும் பாடு’ ’காதலித்தால் போதுமா’ போன்ற படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த ’தங்கச்சுரங்கம்’ என்ற படத்தில் சரோஜா என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார்.

bv radha1

நடிகை குமாரி ராதா பிரபல இயக்குனர் கேஎஸ்எல் சாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஏராளமான படங்களை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளார். நடிகை குமாரி ராதா பெங்களூரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது விருப்பத்திற்கு இணங்க அவரது உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக கொடுக்கப்பட்டது.

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் அவர்கள் திரையுலக பக்கமே இல்லாமல் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.