ஆன்மீகம்

ஏழு கடல்களைத் தாண்டிய முத்தாரம்மனின் வரலாறு… அரக்கிகளின் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்த அம்மன்..!

குலசை முத்தாரம்மன் உருவான வரலாறாக வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகிறது. அவற்றில் இது கொஞ்சம் சுவாரசியமானது. ஏழு கடல்களைத் தாண்டிய கதை. பார்க்கலாமா…

7 கடல்களைத் தாண்டி நடக்கும் ஒரு வரலாறு முத்தாரம்மனுக்கு உண்டு. உவர்க்கடல், கருங்கடல், மோர் கடல், தயிர் கடல், பாற்கடல், நல்ல தண்ணீர் கடல், பெருங்கடல் என்று 7 கடல்கள் உண்டு. இந்த 7 கடல்களைத் தாண்டி ஒரு இருண்ட கானகத் தீவு இருந்துருக்கு. அதுக்கு பேரு சம்புத்தீவு. அங்கு ஒரு புற்றுல நாகம் இருந்துருக்கு. அந்த நாகம் பல வருஷ காலமாக யாரையும் தீண்டாமல் விஷத்தை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு அமிர்தமாக கலசத்தில் கக்கி உள்ளது.

அடுத்ததா வந்தவங்க சொல்றது வேற லெவல்ல இருக்கு. அந்தப் பாம்பு கக்குனது அமிர்த கலசம் இல்லையாம். அமிர்த கர்ப்ப கலசம். அத்தனை வருஷமா தேக்கி வச்சிருந்த அந்த விஷத்தை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு முட்டையைக் கக்கியதாம்.

அந்த முட்டை கிட்ட யாருமே நெருங்க மாட்டாங்க. அந்தப் பாம்பும் அந்த இடத்தை விட்டுப் போயிடுது. அதே தீவுல வசித்துக் கொண்டு இருந்த சக்தி முனி என்பவர் ஒரு மந்திரத்தைப் போட்டு அந்தப் பாம்பு முட்டைப் பொரிக்கும் படி ஆகட்டும் என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

அந்த முட்டைக்குள்ள இருந்து 7 அரக்கிகள் வாராங்க. அவங்க வளர்ந்து அந்த இருட்டுக் கானகத்துக்குள்ளேயே சுற்றிக்கிட்டு வாராங்க. நாம பொறந்ததுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிட்டு 4 அரக்கிகள் அதைக் கேட்க மேலோகத்துக்குப் போயிடுறாங்க. மீதி உள்ள 3 அரக்கிகள் நாம முதல்ல இந்த பூமியிலயே வாழ்ந்து வாரிசு கொடுப்போம். அதுக்கு எந்த ஆண்மகனோட துணையும் இருக்கக்கூடாது.

ஆண்டவனாப் பார்த்து அருள்பிரசாதமா குழந்தையைக் கொடுக்கணும். அதுக்காக சிவபெருமானை நோக்கித் தவம் இருப்போம். அவரு தான் இந்த மாதிரியான சிறப்பு வரங்களை எல்லாம் தருவாரு.

பல காலமா தவம் இருக்கிறாங்க. அவங்களைச் சுற்றிப் புற்றுலாம் வளர்ந்துடுது. ஆனால் சிவபெருமான் கொஞ்சம் கூட மனம் இரங்கவில்லை. அதைப் பார்த்த தேவி, ஆண்டவா ஏன் அவங்களுக்கு இன்னும் வரம் கொடுக்க மாட்டேங்குறீங்க… ஏன் இப்படி கல் நெஞ்சக்காரரா இருக்கீங்க… போய் கொடுத்துட்டு வாங்கன்னு சொல்றாங்க.

அதுக்கு சிவபெருமான், தேவி அவங்க கேட்குறது சாதாரண வரமல்ல. ஆணின் துணையில்லாம குழந்தை வரம் கேட்குறாங்க. இதைக் கொடுத்துட்டேன்னா பூலோகத்துல எல்லாரும் எனக்குக் குழந்தை வரம் வேணும்னு கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனால அது சரிப்பட்டு வராது.

அப்படின்னா அவங்க கேக்குறதுக்கு வழியே இல்லையான்னு கேட்குறாரு. இருக்கு. பூலோகத்துல சக்தி முனி இருக்காரு. அவரால தான் அந்த வரத்தைக் கொடுக்க முடியும்னு சொல்றாரு. இதைக் கேட்டதும் மனசுக் கேட்காத பார்வதி பூலோகத்துக்குப் போயி அந்த 3 அரக்கிகளையும் எழுப்பி விவரத்தை சொல்றாங்க.

3 arakkis

சரிங்க. அரக்கிகளா உங்களுக்கு நான் குழந்தை வரத்தைத் தாரேன். அது பெரிய விஷயமே கிடையாது. ஆனா காட்டுக்குள்ளே தனியா சுத்திக்கிட்டு இருக்கேன். சாப்பிட்டு பல நாளாச்சு. நல்லா ஒரு விருந்து வைங்க. அதைச் சாப்பிட்டு விட்டு நான் உங்களுக்கு வரம் தாரேன்னாரு.

அதனால நல்லா விருந்து சமைச்சி பரிமாறி அவரோட ஆசையை நிறைவேற்றுறாங்க. உடனே சக்தி முனி ஒரு வேள்வித் தீயை வளர்த்து இந்த மூவருக்கும் 3 ஆண் குழந்தைகளைக் கொடுக்குறாரு. அதை அரக்கிகள் வளர்க்க ஆரம்பிச்சிடுறாங்க.

ஆம்பளைங்களேப் பிடிக்காம வளர்ந்த அரக்கிகளுக்கு இந்த ஆம்பளைப் பிள்ளைகளைப் பார்த்ததும் அவங்களுக்கு விருப்பம் இல்லாமப் போயிடுது. அதனால அந்தக் குழந்தைகளை அனாதையா அந்தக் காட்டுக்குள்ளே போட்டுவிட்டு அவங்க வேற இடம் போயிடுறாங்க.

இப்போ இந்தக் குழந்தைகள் எல்லாம் அனாதையா சுத்திக்கிட்டு இருக்கு. அப்படியிருக்க சக்தி முனி 12 வருஷமா கடுமையா தவம் இருக்காரு. இவர் வளர்த்த வேள்வித்தீ புகையால் மேல் உலகம் ஸ்தம்பித்தது. உடனே பார்வதி தேவி பூலோகத்துக்கு வந்து சக்தி முனியோட கோபத்தை நிறைவேற்ற வாராங்க.

Sakthi muni

பூலோகத்துல இருக்குற புகை பார்வதி தேவியைக் கடுமையாத் தாக்க அவருக்கு வியர்த்துக் கொட்டுது. அந்த வியர்வைத் துளியைக் கொண்டு அந்த நெருப்பில் வீச புகை போயிடுது. அப்போ பார்வதி தேவியின் வியர்வைத் துளிகள் முத்துக்களாக வீசும்போது ஒரு அம்மன் பிறந்து வாராங்க. முத்துல இருந்து பிறந்து வந்த அம்மன் ஆதலால் முத்தாரம்மன் ஆனார்.

பார்வதி தேவி அந்த முத்தாரம்மனைக் கைலாசத்துக்கு அழைச்சிட்டுப் போறாங்க. அங்கிருந்து பலவிதமான வரங்களை வாங்கிட்டுப் பூலோகத்துக்கு வாராங்க. காட்டுக்குள்ள அனாதையா இருந்த அந்த சிறுவர்களுக்கு பலவிதமான வரங்களைத் தாராங்க. ஆனா அரக்கிகள் குழந்தைகள் முப்புரத்தில் கோட்டைக் கட்டி ராஜபோகமாக வாழ்ந்து வர்றாங்க.

அரக்கிகளின் குழந்தை அல்லவா… அவர்களது குணம் இருக்கத் தானே செய்யும். தேவர்களுக்கும், மக்களுக்கும் கொடுமை செய்றாங்க. அதைப் பார்த்த சிவபெருமான் அவர்களை வதம் செய்கிறார். உடனே முத்தாரம்மன் ஐயய்யோ என் குழந்தைகளை எல்லாம் கொன்னுட்டீங்களேன்னு கதறி அழுது அவர்களை மீண்டும் மனுஷங்களா உயிர்ப்பிக்கிற வரம் கேட்கிறார். வீரபுத்திரன், வீர வைரவன், வைரவநாதன்கற பேர்ல அந்த 3 பேரும் நல்லவங்களாக மாறி சாமியாகிப் போறாங்கன்னு கதை சொல்றாங்க.

 

 

Published by
Sankar

Recent Posts