யாரு சாமி நீ..? எங்கிருந்து வந்த.. இப்படி ஒரு தங்கமனசுக்காராரா? KPY பாலாவிற்கு குவியும் வாழ்த்து!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கலக்கி வருபவர் நடிகர் பாலா. பல ரியாலிட்டி ஷோக்களில் தன்னுடைய திறமையை நிரூபித்து இன்று சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் பன்முகம் காட்டி வருகிறார்.

வெறும் காமெடியானாக மட்டுமே பாலாவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நாம் அண்மைக் காலமோக அவரின் செயல்பாடுகளால் எவ்வளவு சமூக ஆர்வம் மிக்க மனிதர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆபத்துக் காலங்களில் மலைவாழ் கிராமங்களில் உள்ள மக்களுக்கு விரைவான மருத்துவ வசதி வேண்டும் என இதுவரை 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக அவர் யாரிடமும் நன்கொடை பெற்றது கிடையாது. தனது சொந்த செலவில் இதனைச் செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையையே பதம்பார்த்த மிக்ஜாம் புயலால் ஏராளமனோர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரிடையாகவே சென்று அங்கிருந்த மக்களுக்கு தலா ரூ. 1000 வழங்கி நிவாரணப் பொருட்களையும் கொடுத்தார்.

உலக சினிமாக்களை கரைத்துக் குடித்த நக்கல் மன்னன்.. கவுண்டமணியின் மறுபக்கத்தை உடைத்த நடிகை..

இதேபோல் அறந்தாங்கி நிஷாவும் தனது பங்கிற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவி புரிந்தார். இந்நிலையில் பாலா தனது அடுத்த சமூகப் பணியைத் துவங்க உள்ளார். யாரு சாமி இவரு..? என்ன மனுஷன்யா என்று சொல்லும் அளவிற்கு இனி மாதந்தோறும் 50 பேருக்கு தலா 1000 ரூபாயை நிதியாக அளிக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளார். அதன் முதற்கட்டமாக கடந்த காதலர் தினத்தன்று தனது சமூகப் பணியைத் தொடங்கிய பாலா இனி மாதந்தோறும் இந்த நடைமுறை தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தான் நடிகராகவும், தொகுப்பாளராகவும் இருந்து இரவு பகல் பாராமல் உழைத்து வரும் பணத்தில் இது போன்ற நற்காரியங்களை பாலா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் துன்பத்தின் போது பிறருக்கு உதவும் பாலாவின் இந்த மனிதாபிமான குணம் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத் துறையில் இருக்கும் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பாலாவின் இந்தச் செயல் பணத்தினை வைத்துக் கொண்டு வீட்டில் அதில் படுத்துறங்கும் பலருக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

Published by
John

Recent Posts