கொலைகாரன் துரத்தும் கொலைகார படங்கள்

கொலைகாரன் படம் இப்போ ரிலீஸ் ஆகுது அப்போ ரிலீஸ் ஆகுது என்று செய்திகள் வெளியானது. மே 1 தொழிலாளர் தினத்துக்கே ரிலீஸ் ஆக வேண்டிய படம் என்று சொல்லப்பட்டது.பின்பு மே 17 என்ற தேதியும் சொல்லப்பட்டது.பின்பு ஒருவழியாக ரம்ஜானுக்காக ஜூன் 5ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் திரைப்பட வரலாற்றில் எண்ணற்ற த்ரில்லர் படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. அந்த வரிசையில் தினமும் ஒரு படத்தோடு கொலைகாரனை ஒப்பிட்டு போஸ்டர் தயார் செய்யப்பட்டு வருகிறது. நேற்று சிகப்பு ரோஜாக்கள் படத்தோடு ஒப்பிடப்பட்டிருந்தது. இப்போது வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த அந்தக்கால த்ரில்லர் படமான பொம்மை படத்தோடு இப்படத்தை ஒப்பிட்டு போஸ்டர் வந்துள்ளது.

இந்த பொம்மை படத்தில்தான் பாடகர் கேஜே ஜேசுதாஸ் பாடகராக அறிமுகமானார். இது மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற த்ரில்லர் படம்.

Published by
Staff

Recent Posts