ஐபிஎல் தொடரில் கோலிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அந்த இந்திய பவுலர்.. எந்த வெளிநாட்டு வீரராலும் நெருங்க முடியாத சம்பவம்..

இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த பேட்ஸ்மனாக இருந்து வருபவர் தான் விராட் கோலி. இந்த ஆண்டு நடைபெற உள்ள டி 20 உலக கோப்பையில் அவர் ஆடமாட்டார் என பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் டி 20 போட்டிகளில் அதிரடியாக ஆடாமல் சற்று பந்துகளை அதிகம் எடுத்து அதற்கேற்ற வகையில் ஸ்ட்ரைக் ரேட்டை குறைவாக வைத்திருந்தது தான்.

இதனால் டி 20 உலக கோப்பையில் அவரை விட இளம் வீரர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருக்க, இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளியை பிசிசிஐ நிறுவனத்தினர் சிலரே வைத்து விட்டனர். ஜூன் ஒன்றாம் தேதி டி20 உலக கோப்பை ஆரம்பமாக உள்ள நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் கோலி அடிவரும் ஆர்சிபி அணி இந்த தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டு பரிதாபமான நிலையில் உள்ளது. மற்ற அணிகள் அனைத்துமே சொந்த மைதானத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் ஆர்சிபி மட்டும் 2 போட்டிகளில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் தோல்வி அடைந்துள்ளது.

மீதமுள்ள போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு அவர்களால் முன்னேற முடியும் என்ற நிலையில் எப்படி இதனை அவர்கள் கையாள போகிறார்கள் என்பதை அறியவே அந்த அணியின் ரசிகர்களுக்கு வேதனை தான் அதிகம் உள்ளது. இதற்கிடையே கோலிக்கு ஐபிஎல் தொடரில் சிம்ம சொப்பனமாக விளங்கிவரும் பந்து வீச்சாளர் யார் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

புதிதாக உள்ளே வரும் இளம் வயது பந்து வீச்சாளர்கள் தொடங்கி சர்வதேச அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு பந்து வீரர்களானாலும் மிக அசாத்தியமாக அவர்களை எதிர்கொண்டு ரன் அடிப்பதில் வல்லவர் கோலி. அப்படிப்பட்ட கோலியை இந்த ஐபிஎல் தொடரில் அதிக முறை விக்கெட் எடுத்துள்ளவர் ஒரு இந்திய பந்துவீச்சாளர் தான்.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வீசி வரும் சந்தீப் ஷர்மாவிற்கு இதுவரை சர்வதேச போட்டியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் தற்போது ஆடிவரும் பல பந்து வீச்சாளர்களை விட அதிக திறமையுள்ள இவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் இந்த சீசனிலும் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக பந்து வீசி வருகிறார் சந்தீப். மேலும் ஐபிஎல் தொடரில் விராட் கோலியை அதிக முறை (7 முறை) விக்கெட் எடுத்துள்ளதும் சந்தீப் சர்மா தான்.

இவருக்கு அடுத்தபடியாக ஆஷிஷ் நெஹ்ரா விராட் கோலியை ஆறு முறையும், முகமது ஷமி ஐந்து முறையும், பும்ரா மற்றும் தவால் குல்கர்னி நான்கு முறையும் எடுத்துள்ளனர். வெளிநாட்டு பந்து வீச்சாளர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடி வந்தாலும் கோலியின் விக்கெட்டை அதிக முறை எடுத்துள்ளது ஒரு இந்திய பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களின் அடுத்த போட்டியில், ஏப்ரல் 06 ஆம் தேதியன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...