ரஜினி, சிவாஜி என முன்னணி நடிகர்களுடன் 16 படம், மலையாளத்தில் 116 படங்கள் நடித்த கீர்த்தி சுரேஷ் அம்மா.. இவ்வளவு பெரிய நடிகையா?

தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா தான் முன்னணி நடிகை மேனகா. இவர் ரஜினியுடன் இணைந்து நெற்றிக்கண் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் நடிகை மேனகா மலையாளத்தில் பல படங்களில் நடித்து கேரளா திரையுலகில் 80களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துள்ளார்.

நடிகை மேனகா முன்னணி நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் சிபாரிசில் தமிழ் சினிமாவில் 1980 ஆம் ஆண்டு இராமாயி வயசுக்கு வந்துட்டா என்னும் தமிழ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான முதல் படமே மேனகாவுக்கு வெற்றி படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் அவரின் நடிப்பும் அனைவராலும் பேசப்பட்டது.

இதை அடுத்து நடிகை ஸ்ரீவித்யாவின் சிபாரிசில் மலையாள இயக்குனர் ஜார்ஜ் என்பவரின் படத்தில் நடித்தார் நடிகை மேனகா. இந்த திரைப்படத்தின் மூலம் தான் மலையாள திரையுலகில் அடி எடுத்து வைத்த மேனகா முதல் படத்திலேயே தனது தோற்றம் மற்றும் தன் இயல்பான நடிப்பை கொண்டு கேரள மக்களை மிகவும் கவர்ந்ததால் அவருக்கு அடுத்தடுத்த பல படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது.

மேனகாவின் நடிப்பு கேரள மக்களுக்கு மிகவும் பிடித்து போகவே மேனகாவை அக்கா என்றே இன்று வரை அன்போடு அழைத்து வருகின்றனர். இவர் மலையாளத்தை தொடர்ந்து அவ்வபோது தமிழ் படங்களிலும் நடித்து வந்துள்ளார். அதில் தூக்கு மேடை, ஓம் சக்தி, கீழ்வானம் சிவக்கும், நெற்றிக்கண், சாவித்திரி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இதில் ரஜினிக்கு ஜோடியாக நெற்றிக்கண் படத்திலும், நீதிபதி என்ற படத்தில் சிவாஜிக்கு மகளாக மேனகா நடித்து கலக்கியிருப்பார்.ஆனால் மேனகா தமிழ் சினிமாவை காட்டிலும் மலையாள சினிமாவில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். மேனகாவிற்கு நல்ல ரோல், நல்ல டீம் ,பெரிய ஹிட் என்று அடுத்தடுத்த அமைய கேரள மக்கள் மேனகாவை கொண்டாடத் துவங்கியுள்ளனர்.

மேனகாவின் திரை வாழ்க்கை என்பது 80களில் தொடங்கி 86இல் முடிவு பெற்ற ஒரு குறுகிய கால பயணம் என்று போதிலும் மலையாளத்தில் மட்டும் 116 படங்களிலும் தமிழில் 16 படங்களிலும் நடித்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி கேரளாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருந்த மம்முட்டியுடன் 18 படங்களிலும், மோகன்லால் உட்பட அன்றைய உச்ச நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

ஜெயம் ரவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கல்யாணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

மேனகா இப்படி ஒரு குறுகிய காலத்திலேயே ஒரு உச்ச நடிகையாக மாறியதற்கு காரணம் அவரது சிரிப்பும், அழகும், எளிமையான தோற்றமும் தான். இவ்வாறு சிறந்த நடிகையாக மேனகா வலம் வந்த நேரத்தில் எந்த ஒரு படத்திலும் கிளாமர் ரோலின் நடிக்காத காரணத்தால் மேனகாவின் நடிப்பு அனைத்து தரப்பினராலும் வரவேற்பு கூறியதாக இருந்துள்ளது.

 

Published by
Velmurugan

Recent Posts