சால்சா முதல் பேலே டான்ஸ் வரை பின்னி பெடல் எடுக்கும் கீர்த்தி பாண்டியன்… நடமாடும் விவசாயியாக மாறியது எப்படி?

சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக கீர்த்தி பாண்டியன் குறித்த முழு தகவல்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அருண் பாண்டியனின் மூன்றாவது மகள் தான் கீர்த்தி பாண்டியன். இவருக்கு கவிதா பாண்டியன் மற்றும் கிரண பாண்டியன் என இரு அக்கா உள்ளனர். இவர் 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி சென்னையில் பிறந்துள்ளார். கீர்த்தி பாண்டியன் தனது பள்ளி படிப்பை சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாசம் பள்ளியில் படித்து முடித்து அதைத் தொடர்ந்து அங்கேயே கல்லூரி கிராஜுவேஷனையும் முடித்துள்ளார்.

சின்ன வயதில் இருந்தே கீர்த்தி பாண்டியனுக்கு தான் நடிகையாக வர வேண்டும், வெள்ளித்திரையில் சிறந்த நடிகையாக கலக்க வேண்டும் என்ற ஆசை தொடக்கத்தில் இருந்துள்ளது. இந்த ஆசையினால் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் தான் சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்த கீர்த்தி பாண்டியன் 2015 ஆம் ஆண்டு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க தொடங்கினார். அதற்காக தேவராட்டம், சிலம்பாட்டம், தாரை, சால்சா, பலே டான்ஸ் என அனைத்து நடன கலைகளையும், நடிப்பு கலையையும் கற்று தேர்ந்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.

சினிமாவில் ஹீரோயின் ஆக நடிக்க ஆசைப்பட்ட கீர்த்தி பாண்டியன் தனது தந்தையின் பெயரையும், புகழையும் எந்த இடத்திலும் பயன்படுத்தாமல் ஒவ்வொரு படங்களின் ஆடிஷன்களிலும் முறையாக கலந்து கொண்டு முயற்சித்து வந்துள்ளார். ஆனால் அவரின் மெலிந்த தோற்றம், கலர் குறைபாட்டின் காரணமாக பல ரிஜெக்ஷன்களை சந்தித்துள்ளார்.

அதை தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் பிசினஸில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது அப்பாவான அருண்பாண்டியன் ஏற்கனவே செய்து வந்த டிஸ்ட்ரிபியூஷன் பிசினஸில் இவரும் கலந்து கொண்டார். மேலும் கீர்த்தி சென்னையை தொடர்ந்து சிங்கப்பூரில் சொந்தமாக ஒரு டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனியை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்துள்ளார்.

அந்த நேரத்தில் கீர்த்திக்கு படம் நடிக்க பல வாய்ப்புகள் அவரை தேடி வந்த போது கதை சிறப்பாக அமையாததால் அதை மறுத்துள்ளார். தான் நடிக்கும் முதல் படம் தனது மனதிற்கு திருப்தி அளித்ததாக இருக்க வேண்டும் என நல்ல கதைகளுக்கு மட்டும் முதலில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்த நிலை தொடர சில நாட்களுக்குப் பின் இவரின் கலர் குறைபாட்டின் காரணமாக இவருக்கு பட வாய்ப்பு குறைய தொடங்கியது. தான் இனி படத்தில் நடிக்க முடியாது என்ற நிலைக்கு பின் தள்ளப்பட்டார் கீர்த்தி பாண்டியன்.

அந்த நேரத்தில் தான் கீர்த்தியின் தோழியான அஸ்வதியின் மூலமாக ஹரிஸ் என்பவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹரிஷ் ஒரு படத்தை எடுக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு ஒரு புதுமுக பெண் கதாபாத்திரம் தேவைப்படும் பட்சத்தில் நீ அந்த படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கீர்த்தியின் தோழி அஸ்வதி கூறியதன் மூலமாக கீர்த்தி பாண்டியன் படத்தில் நடிக்க முடிவெடுத்தார். அதன் பின் இயக்குனர் ஹரிஷ்யை சந்தித்து பேசினார். அவர் கொடுத்த நம்பிக்கையின் பேரில் தான் கீர்த்தி பாண்டியன் தனது முதல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் முதல் படத்தில் நடிக்கும் பொழுது ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயத்தில் தான் நடிக்க தொடங்கியுள்ளார் கீர்த்தி பாண்டியன். இவரின் முதல் படமான தும்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றி விழாவின் போது இயக்குனர் ஹரிஷ் கொடுத்த தைரியத்தில் தான் இந்த படத்தில் நடித்ததாக கீர்த்தி பாண்டியன் வெளிப்படையாக கூறியிருந்தார்.

விஜய்க்கு போட்டியாக அஜித் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்!

அதைத்தொடர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்திலும் நடித்துள்ளார். அதன் பின் லாக்டவுன் வந்ததால் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த லாக்டவுன் சமயத்தில் அவர் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று விவசாயம் செய்து வந்துள்ளார். நிலங்களை பராமரிப்பது, ரோடு போடுவது, விட்டு வேலை பார்ப்பது போன்ற வீடியோக்களை அவரது சமூக வலைதளங்களில் அவ்வபோது பகிர்ந்து வழக்கம். மேலும் விவசாயம் மட்டுமல்லாமல் குதிரை பந்தயம், பாம்புகளுடன் விளையாடுவது, நடனமாடுவது என விதவிதமான வீடியோக்களையும் அவர் தனது வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தும்பா, அன்பிற்கினியாள் என்ற இரண்டு படங்களை தொடர்ந்து தற்பொழுது ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனது காதல் கணவர் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன். இந்த திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

Published by
Velmurugan

Recent Posts