சங்கீத் நிகழ்ச்சியில் செம டான்ஸ்!.. கவின் பட நடிகைக்கு நாளை கல்யாணம்!.. வாழ்த்தும் பிரபலங்கள்!..

நடிகை அபர்ணா தாஸ் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர் தீபக் பரம்போல் என்பவரை நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளார். அவருடைய சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதன் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அபர்ணா தாஸ் திருமணம்:

ஞான் பிரகாஷன் எனும் மலையாள படத்தின் மூலம் கடந்த 2018ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் அபர்ணா தாஸ். அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தவர், நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, டாம் ஷைன் சாக்கோ நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ap3

பீஸ்ட் படத்தை கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான டாடா படத்தில் அபர்ணா தாஸ் ஹீரோயினாக நடித்திருந்தார். டாடா திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து அபர்ணா தாஸுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா குகை இது அல்ல என தனது நண்பர்களை ஆபத்தான இடத்துக்கு அழைத்துச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்த தீபக் பரம்போல் என்பவருடன் இணைந்து நடித்த அபர்ணா தாஸ் அவருடன் காதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் ஏப்ரல் 24 ஆம் தேதியான நாளை திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

GL2XPQjWIAA5wnT

சங்கீத் நிகழ்ச்சியில் செம டான்ஸ்:

நேற்று அபர்ணா தாஸ் ஹல்தி கொண்டாடிய வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனக்கு திருமணம் ஆகப்போகிறது. தன்னை வாழ்த்துங்கள் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், தற்போது சங்கீத் கொண்டாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாளை நடைபெற உள்ள அபர்ணா தாஸ் திருமணத்தில் மலையாளத் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபர்ணா தாஸ் சங்கீத் நிகழ்ச்சி வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C6HBpDYoy5j/

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...