கவின் நடிப்பில் ‘ஸ்டார்’ ரெடி… ரிலீஸ் எப்போது…

சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கால் பதித்த நடிகர்களுள் ஒருவர் கவின் ராஜ். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். பின்னர் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாகவும், பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்டதன் மூலமாக பிரபலமானவர்.

இது தவிர ‘வேட்டையாடு விளையாடு’, விஜய் தொலைக்காட்சி விருதுகள்’, கிங் ஆப் டான்சர்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை கவின் தொகுத்து வழங்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக தமிழ் சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வினித் வரப்ரசாத் இயக்கத்தில் உருவான ‘ லிப்ட்’ என்கிற திகில் திரைப்படத்தில் அமிர்தா ஐயர் உடன் இணைத்து நடித்திருந்தார். இப்படம் நேரடியாக டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கவினின் நடிப்பு அனைவரின் பாராட்டுகளைப் பெற்றது.

அதன் பின்பு 2023 ஆம் ஆண்டு எஸ். அம்பேத்கர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கணேஷ். கே. பாபு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘டாடா’. இதில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்தார். இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகி கவினுக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பெற்று தந்தது. இப்படம் கவினின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.

டாடா படத்தின் வெற்றிக்கு பின், ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘ஸ்டார் ‘என்ற திரைப்படத்தில் கவின் நடிக்கிறார். ‘ப்யார் பிரேம காதல்’ புகழ் இயக்குனர் இளன் இப்படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் கைலாசம், கீதா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘ஸ்டார்’ திரைப்படம் கல்லூரிக் கதை, காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் போன்ற கலவையாக இருக்கும் எனவும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதாகவும், வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...