கற்பனை என்றாலும் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு வரலாறா? வாலியின் வருத்தம் தீர்த்த கந்தன்!

முருகப் பெருமான் பக்தி பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கந்த சஷ்டி கவசம், கந்த குருகவசம் இவ்விரண்டு பாடல்களுக்கு அடுத்தபடியாக என்றும் நினைவில் இருக்கும் முத்தான பாடல்கள்தான் கற்பனை என்றாலும் போன்ற முருகன் பாடல்கள். வாலிபக் கவிஞராக விளங்கிய வாலி தெய்வீக மணத்துடன் இந்தப் பாடல்களை எழுத அதற்கு இசையாலும், குரலாலும் உயிர் கொடுத்தார் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். இந்தப் பாடல் உருவானது ஒரு சுவாரஸ்ய வரலாறு :

கவிஞர் வாலியின் சகோதரி உடல்நலம் மிகவும் குன்றி காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த வேளையில் திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள மருத்துவர் ஒருவரின் சிகிச்சையால் உயிர் பிழைத்தாராம். அந்த மருத்துவரின் பெயர் சுப்ரமணியன். ஏற்கனவே முருக பக்தராக இருந்த வாலி இச்சம்பவத்திற்குப் பிறகு தீவிர முருக பக்தராக மாறினார்.

அவ்வாறு அவர் முருகன் மேல் பற்று கொண்டு இயற்றிய பாடல் தான் கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனை உனை மறவேன் என்ற பாடல். இப்பாடலைக் கேட்டு உருகாதவர் யாரும் இல்லை.

மேலும் வாலியின் கனவில் முருகன் வந்து பாடுவதாகவும் ஒரு செய்தி உண்டு. அவ்வாறு முருகன் மேல் பற்றுக் கொண்டு அவர் இந்தப் பாடலை இயற்றி டி.எம்.எஸ் அவர்களுக்கு ஒரு போஸ்ட் கார்டில் அனுப்ப தினமும் வரும் ஆயிரக்கணக்கான கடிதங்களில் இதைப் பார்க்கும் சந்தர்ப்பம் பாடகர் டி.எம்.எஸ்-க்கு கிடைக்க உடனே வரை மெட்டுப் போட்டு பாடியதுதான் இந்தப் பாடல் என்ற செய்தியும் உள்ளது.

வராத நடிகரால் வந்த சான்ஸ்.. முதல் காட்சியிலேயே கொலை செய்த நடிகர் இளவரசு திரைப் பயணம்

மேலும் டி.எம்.எஸ் வாலியிடம் இந்தப் பாடல் திங்களன்று வானொலியில் ஒலிபரப்பாகும். கேட்டுவிட்டு கருத்தைக் கூறு. மேலும் நீ சென்னை வந்து என்னை சந்திக்கவும் சன்மானம் தருகிறேன் என்றும் டி.எம்.எஸ் கூற வாலியின் வாழ்வில் ஒளி பிறந்தது. என்ன நடக்கிறது என்று தெரியாமல் தாயே.. முருகா என உரக்கக் கத்தினார் வாலி.

அதன்பின் டி.எம்.எஸ் அவரை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்த அன்று உருவானவர்தான் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு அடுத்தபடியாக சிறந்த கவிஞராக தமிழகம் தூக்கிக் கொண்டாடி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...