பொழுதுபோக்கு

தவறைத் திருத்திக் கொள்ளும் பெரிய மனசு விஜயிடம் இருக்கிறது… சிநேகன் வெளிப்படைப் பேச்சு!

நடிகரும், கவிஞருமான சினேகன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து 2000 முதல் சினிமாவில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். பிக்பாஸ் சீசனில் பங்கேற்றதைத் தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவரது தலைமையில் நடிகை கன்னிகாவுடன் திருமணம் நடைபெற்றது. கட்சியில் சினேகனுக்கு கமல் இளைஞரணி மாநில செயலாளர் பதவியைக் கொடுத்தார்.

கடந்த தேர்தலில் கமல் கட்சி களம் இறங்கியதும் களத்தில் நின்று கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அன்று முதல் இன்று வரை தற்போது கட்சியைத் தொடர்ந்து வருகிறார். இவர் நடிகர் விஜயின் அரசியல் பயணம் பற்றியும், கமல் கட்சியின் தற்போதைய நிலை குறித்தும் சென்னை வளசரவாக்கத்தில் ஒரு ஸ்டூடியோ திறப்புவிழாவிற்கு வரும்போது வெளிப்படையாகப் பேசி உள்ளார். இதைப் பற்றிப் பார்ப்போம்.

Snehan and Kanniga

இளையராஜா வந்து எனது 15 வருட கால நண்பர். வளசரவாக்கத்தில் அவரது கிரீம் ஸ்கிரீன் மேக்ஓவர்னு அழகா ஒரு ஸ்டூடியோ தான் இது. நவீன கருவிகளுடன் நேர்த்தியாக இருக்கு. சுதந்திர இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம்.

அப்படித் தான் நடிகர் விஜயும் ஆரம்பிச்சிருக்காரு. அவரது அரசியல் பயணத்தை வரவேற்கிறேன். கட்சியின் பெயர் தவறு என்றதுமே அதைத் திருத்திக் கொள்கிற மனப்பக்குவத்தை வரவேற்கிறேன். நல்ல தமிழ்க்கற்றவர்களுக்கே ஒற்றுப்பிழைகள் வரத்தான் செய்கிறது. அதை ஒரு பெரிய தவறா சொல்ல முடியாது. பேச்சுவழக்கில் சொல்லக்கூடியது.

தவறுன்னு சொன்ன உடனே அதைத் திருத்திக் கொள்கிறது உண்மையிலேயே பெரிய மனசு. அந்தப் பக்குவத்தை நான் வளைந்து கொடுக்கிற பக்குவமாகத் தான் பார்க்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் இந்தத் தேர்தலுக்குக் கண்டிப்பாகப் போட்டியிடும். இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான அறிவிப்புகள் வந்து விடும். அதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அடித்தட்டு மக்கள் வரை எங்களது சேவைகளைத் தொடர வேண்டும் என்பதற்காக அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. அதற்கு ஒரு பதவியோ, பொறுப்போ தேவைப்படுகிறது.

Snehan, Kamal

வெறும் தனி மனிதனோட முன்னேற்றமோ, ஒரு கும்பலோட முன்னேற்றமோ அங்கு ஒண்ணுமே செய்ய முடியாது. அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. அதற்கு ஒரு பொறுப்புக்குப் போகணும்னா சில இடங்களில் நமது இலக்கை அடைவதற்கு வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. அது சரியா, தப்பாங்கற ஆய்வுல தான் நாங்க இறங்கிக்கிட்டு இருக்கோம். இன்னும் 2 நாள்ல அதற்கான தீர்வு வந்துவிடும்.

இவ்வாறு சினேகன் பேசினார்.

Published by
Sankar

Recent Posts