முஸ்லீம் கதாபாத்திரத்தில் சிவாஜி பாடிய பாடல்.. ஹிந்து மத மந்திரத்தை உள்ளே வைத்த கண்ணதாசன்.. வாயடைத்த இயக்குனர்!!

இன்றைய காலக்கட்டத்தில் திரைப்படங்களை பார்ப்பதற்கு ஒரு பெரும் கூட்டம் இருப்பதை போலவே, படத்தில் வரும் பாடல்களை ரசிக்கவும் பெருந்திரளான மக்கள் கூட்டம் உள்ளது.

பேருந்து, ரெயில் என பயணம் மேற்கொள்ளும் போதும், தனியாக இருக்கும் போதும், தங்களை உத்வேகப்படுத்தவும் பாடல்கள் ஒரு சிறந்த கருவியாக இருக்கிறது. நம்மில் பலரும் நிச்சயம் ஒவ்வொரு நாளையும் பாடல்களை கேட்காமல் அல்லது முணுமுணுக்காமல் நிச்சயம் கடந்து செல்லவே முடியாது.

அப்படிப்பட்ட பாடலுக்கு இசை என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு அதன் வரிகளும் மிக முக்கியம். படத்தில் வரும் ஒரு முதன்மை கதாபாத்திரம் பற்றியும், படத்தின் கதைக்கரு பற்றியும் ஒரு பாட்டின் வரிகளில் மிக எளிதாக சொல்லிவிட முடியும். இதனால், ஒரு பாடல் பெரிய அளவில் கவனம் பெற இசையமைப்பாளர் மட்டுமில்லாமல், அதன் பாடலாசிரியர் மிக பெரிய பங்காற்ற வேண்டும். அந்த வகையில் தமிழ் சினிமா வரலாற்றில் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, கவிஞர் வாலி, வைரமுத்து, நா. முத்துக்குமார் என முக்கியமான பாடலாசிரியர்கள் பலரை சொல்லிக் கொண்டே போகலாம். இதில் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் கவிஞர் கண்ணதாசன்.

அவர் எழுதும் பாடல் வரிகள், வெறுமென படத்தின் சூழ்நிலையை மட்டும் சொல்வதை போல அமையாமல், வாழ்கைக்கு தேவையான விஷயங்களையும் கொண்டு அதனை நேர்த்தியாக வடிவமைத்திருப்பார். அதே போல, பாடல் வரிகள் எழுதும் சமயத்தில் நடந்த விஷயங்களை கொண்டு பாடல் வரிகளில் கதை சொல்வதிலும் கண்ணதாசன் கில்லாடி. அப்படி ஒரு சம்பவம் குறித்து செய்தி தான் இது.
Sivaji Ganesan Movie

பாவ மன்னிப்பு என்னும் திரைப்படத்தை இயக்குனர் பீம்சிங் இயக்கி இருந்தார். இதில், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம்.ஆர். ராதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதைப்படி, ஹிந்து மத குடும்பத்தில் பிறந்த சிவாஜி, முஸ்லீமாக மாறி வளரும் படி கதை அமைந்திருக்கும். அதன்படி முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் பாடும் பாடலில் ஹிந்து மத நுட்பம் கலந்த வகையில் இருக்க வேண்டும் என இயக்குனர் பீம்சிங் விருப்பம் கொண்டதாக தெரிகிறது. இதனை இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் பாடலாசிரியர் கண்ணதாசனிடம் கூறினார். கண்ணதாசனும்,

“எல்லோரும் கொண்டாடுவோம், எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்”
“வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவில் வைப்போம் வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவில் வைப்போம் இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்”

என்ற வரிகளையும் எழுதிக் கொடுத்தார். ஆனால், அதில் ஹிந்து மற்றும் முஸ்லீம் மதத்தை இணைக்கும் வகையில் வரிகள் இல்லை என பீம்சிங் குறிப்பிட்டார்.
Kavignar Kannadasan

இதற்கு விளக்கம் கொடுத்த கவிஞர் கண்ணதாசன், கொண்டாடுவோம், வைப்போம் என்ற வார்த்தைகளின் இறுதி உச்சரிப்பில் ஒரு முஸ்லீம் வாலிபர், “ஓம்” என்ற ஹிந்து மந்திரத்தை குறிப்பிட்டு பாடுவதாக விளக்கம் கொடுக்க, பீம்சிங் மற்றும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆகியோர் அசந்து போயினர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews