செட் ஆகுமா என டவுட்-டில் எடுக்கப்பட்ட காதல் கோட்டை.. இதுக்குப் பின்னால இப்படி ஓர் சம்பவமா?

அஜீத் அப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த சமயம். மென்மையான காதல் படங்களில் நடித்து இளைஞிகளின் கனவு நாயகனாகத் திகழ்ந்து கொண்டிருந்த சமயம் அது. ஏற்கனவே அஜீத்தை வைத்து வான்மதி படத்தைக் இயக்குநர் அகத்தியன் தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்டை அஜீத்திடம் சொல்ல முதலில் தயங்கி பின்னர் நடித்து இமாலய வெற்றியைக் கொடுத்தார்.

ஏற்கனவே விஜய் பூவே உனக்காக படத்தில் மாபெரும் வெற்றியைக் கொடுக்க அஜீத்துக்கு அப்போது சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றி இல்லாமல் இருந்தது. பின் காதல் கோட்டை ரிலீஸ் ஆகி வரலாறு படைத்தது.  3 தேசிய விருதுகள் உள்ளிட்ட விருதுகளை வாங்கிக் குவித்தது.

கார் வாங்க ஏங்கிய மயில்சாமி.. ஆசையாக தொட்டுப் பார்த்தவருக்கு ஏற்பட்ட அவமானம்.. பதிலடி கொடுத்த குடும்பம்

மன்னன் கோப்பெருஞ்சோழன், பெண் கவிஞர் பிசிராந்தையாரின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதியை கதைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. மேலும் இப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு நிலா நிலா ஓடிவா என்பதாகும். ஆனால் காதல்கோட்டை என்று பின் டைட்டில் மாற்றப்பட்டது.

காதல் கோட்டை திரைப்படம் வெளியாகி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தியது. ஒருவருக்கொருவர் கடைசி வரை பார்க்காமலேயே காதலித்து இனிமேல் அவ்வளவுதான் என நினைக்கும் போது ஒருவரையொருவர் சந்திக்கும் நேரத்தில் ஏற்படும் உணர்வுகளை வலியோடு அழகாக காட்டியிருப்பார் அகத்தியன். இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வீரபாண்டியன்.

வான்மதி, காதல் கோட்டை , கோகுலத்தில் சீதை போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அகத்தியன் காதல் கோட்டை படத்தின் ஆலோசனையில் இருக்கும் போது இந்த கதை செட் ஆகுமா என்று கேட்டிருக்கிறார். அதுவரைக்கும் காதல் கோட்டையின் ஒன் லைனை மட்டுமே சொல்லி எடுக்கலாமா வேண்டாமா என்ற தயக்கத்தில்தான் இருந்தாராம்.

அப்போதுதான் இயக்குனர் வீரபாண்டியன் தன்னுடைய கதையை சொல்லியிருக்கிறார். அதாவது வீரபாண்டியன் புத்தகம், கதைகள் எழுதும் பழக்கமுடையவராம். அப்படி அவர் எழுதிய ஒரு புத்தகம் வாரந்தோறும் பள்ளிகளுக்கும் அனுப்பப்படுமாம். அந்தப் புத்தக்கத்தை படித்த ஒரு ஆசிரியை இவர் எழுதிய கதையை படித்து அவர் மீது காதல் வயப்பட்டாராம். அதிலிருந்து கடிதங்கள் மூலமாக இவர்கள் தங்கள் காதலை வளர்த்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 8 வருடங்கள் பார்க்காமலேயே இருவரும் காதலித்து பின் ஒரு திருமணத்தில் சந்தித்தார்களாம். அதன் பிறகே இவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கிறது. இவருடைய நிஜ வாழ்க்கை கதையை சொன்ன பிறகே அகத்தியனுக்கு இந்தப் படத்தை எடுக்க ஒரு தைரியம் வந்ததாம். இப்படித்தான் காதல் கோட்டை உருவாகி இன்று அஜீத் கேரியரில் அசைக்க முடியாத கம்பீரக் கோட்டையாக வீற்றிருக்கிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews