கார் வாங்க ஏங்கிய மயில்சாமி.. ஆசையாக தொட்டுப் பார்த்தவருக்கு ஏற்பட்ட அவமானம்.. பதிலடி கொடுத்த குடும்பம்

சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பது என்பதே அபூர்வம். அப்படி வாய்ப்புக் கிடைத்தாலும் என்னதான் திறமையக் காட்டினாலும் அதிர்ஷ்டம் என்பது சினிமாத் துறையில் இருக்க வேண்டும் என்பது எழுதப் படாத விதி. ஒரே இரவில் ஓஹோவென புகழ்பெற்ற நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால் பல வருடங்களாகப் போராடியும் இன்னும் நிலையான இடம் இல்லாமல் கிடைத்த ரோல்களில் நடிக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

இவ்வாறு தமிழ் சினிமாவில் போராடி தன் திறைமையை நிரூபித்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நேரத்தில் திடீரென மறைந்தவர்தான் மயில்சாமி. இயல்பாகவே இரக்க குணமும், அனைவருடனும் எளிதில் பழகும் சுபாவம் கொண்ட மயில்சாமி திரைத்துறையில் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே சாதித்துள்ளார். பாக்யராஜின் தாவணிக் கனவுகள் படத்தின் மூலம் கூட்டத்தில் ஒருவராக சினிமாவில் தன் முதல் படத்தை ஆரம்பித்த மயில்சாமி பின்னர் தனது மிமிக்ரி திறமை, நகைச்சுவைத் திறமையால் தொடர்ந்து பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

80-களின் காதல் கோட்டை ‘ஒரு தலைராகம்‘ ஹீரோயின் இப்போ என்ன செய்றாங்க தெரியுமா?

ஆரம்பத்தில் இவர் நடிக்கும் போது பல கஷ்டங்களச் சந்தித்துள்ளார். மேலும் கஷ்டத்திலும் தன்னால் இயன்றவரை உதவி செய்வதை மட்டும் அவர் நிறுத்தவில்லை. சக கலைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார். கொரோனா காலத்திலும், வெள்ளம் வந்த காலத்திலும் களத்தில் இறங்கிப் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

ஒருமுறை ஷூட்டிங் முடித்து விட்டு வரும் போது ஒரிடத்தில் நின்று கொண்டிருந்த பென்ஸ் காரை ஆசையாக தொட்டு பார்த்துள்ளார். அப்போது அதைக் கவனித்த காரின் சொந்தக்காரர் ஏன் காரைத் தொடுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதம் செய்தாராம். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி அக்காரின் சொந்தக்காரர் மயில்சாமியை அடித்துவிட்டாராம். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம் மயில்சாமி.

ஆனால், அதே மயில்சாமிக்கு பின்னாளில் அவரின் 50வது பிறந்தாளில் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவருக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக வாங்கி கொடுத்தார்களாம். அன்றுபட்ட அவமானத்தை துடைத்த குடும்பத்தினரின் அன்பைக் கண்டு மயில்சாமி நெகிழ்ந்து போயிருக்கிறார். ஆனாலும் அது நிலைக்காமல் சில வருடங்களிலேயே மயில்சாமி உடல்நலக் குறைவால் திடீரென மறைந்து விட்டார். இந்த தகவலை சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.