காதல் கோட்டை வெற்றிக்கு கை கொடுத்த நடிகை ஹீரா.. ஒர்க் அவுட் ஆன தயாரிப்பாளரின் தந்திரம்

இதுவரை தமிழ் சினிமாவில் வந்த காதல் திரைப்படங்களை காதல் கோட்டைக்கு முன், காதல் கோட்டை படத்திற்குப் பின் என இருவகைகளாகப் பிரிக்கலாம். காதல் கோட்டைக்கு முன்னர் வந்த திரைப்படங்கள் நாயகன் நாயகி சந்திப்பது, மோதல் காதலாவது, கல்லூரிக் காதல் என பல வகைகளில் இருந்தது. ஆனால் பார்க்காமலே காதல் என்ற புது டிரெண்ட் செட்டை உருவாக்கி மாபெரும் வெற்றிப் படமாகக் கொடுத்ததுடன் இரண்டு தேசியவிருதுகளையும் அள்ளினார் இயக்குநர் அகத்தியன்.

நடிகர் அஜீத்துக்கும், தேவயானிக்கும் தங்களது திரை வாழ்விலும் காதல் கோட்டை பெரும் திருப்புமுனையாக இருந்தது. படம் முழுக்க ஹீரோ, ஹீரோயின் சந்திக்காமலேயே, இறுதியாக சில காட்சிகள் மட்டும் சந்தித்துக் கொள்வர். ஆனால் படம் முழுக்க நாயகன், நாயகி சந்திப்பது போன்றே இருக்கும். வான்மதி படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், அஜீத், அகத்தியன் கூட்டணி இப்படத்தில் கைகோர்த்தது.

ஹிட்டாகும் என எதிர்பார்த்த பாடல்.. ஹிட்டாகாததால் விஜய் படத்தில் போட்டு ஹிட் கொடுத்த விஜய் ஆண்டனி.

இந்தப் படத்திற்காக முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா? அகத்தியன் நீங்காத நினைவுகள், நிலா நிலா ஓடி வா போன்ற தலைப்புகளை யோசித்து வைத்திருந்தார். அப்போது தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஊட்டியில் இந்தப் படத்தின் செட்டில், காதல் கோட்டை தயாரிப்பு சிவசக்தி பாண்டியன் என அவராகவே எழுதி ஒட்டியிருந்தார். இதனைக் கண்ட இயக்குநர் அகத்தியனுக்கு இந்தத் தலைப்பு பிடித்துப் போக அதனையே வைத்தார்.

மேலும் சிவசக்தி பாண்டியன் இயக்குநர் அகத்தியனிடம் இந்தப் படத்தில் முதல் காட்சியில் ரசிகர்களை வரவைக்கும் வித்தை எனக்குத் தெரியும். அடுத்த காட்சியிலிருந்து ரசிகர்களை வரவழைப்பது உங்களுடைய பொறுப்பு எனக் கூறியுள்ளார். அது எப்படி தெரியுமா? காதல் கோட்டையில் அஜீத், தேவயானிக்குப் பிறகு ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ஹீரா. எனவே படத்தின் போஸ்டர்களில் நடிகை ஹீராவின் கவர்ச்சிப் போஸ்டர்களை ஒட்டி விளம்பரம் செய்திருக்கிறார். எனவே முதல்காட்சியில் ரசிகர்களால் நிரம்பி வழிய அதன்பின் கதை வெற்றி பெற்றிருக்கிறது.

காதல் கோட்டை தமிழ் சினிமா வரலாற்றில் தடம் பதித்த ஒரு வைரக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews