ஆன்மீகம்

காசியின் புகழ்பெற்ற கங்கா ஆரத்தி

ஹிந்து தர்மத்தில் நீரை போற்றி வணங்குதல் மரபு. கங்கை, காவிரி, போன்றவற்றை பெண் தெய்வமாக நாம் வணங்கி வருகிறோம்.

ஹிந்துக்களின் புண்ணியதலமாக அனைவரும் ஒரு முறையாவது சென்று வர நினைக்கும் புண்ணியத்தலம் காசி.

காசியில் சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை வணங்கி வருவதே மிகப்பெரிய ஆன்மிக உணர்வு ஆகும்.

இந்த காசியில் உள்ள புனித கங்கை நதியில் மாலை வேளைகளில் செய்யப்படும் ஆன்மிக அலைகளை உருவாக்கும் மிக பெரிய ஒரு பூஜைதான் கங்கா ஆரத்தி.

பல சினிமாக்களில் இந்த கங்கா ஆரத்தியை பார்த்திருந்தாலும் நேரில் சென்று அந்த கங்கா ஆரத்தியில் கலந்து கொள்வது மிக சிறப்பு .

இந்த பிரமாண்ட  பூஜை திறந்த வெளியில் கங்கைக் கரையில் தினம்தோறும் செய்யப்படுகிறது இந்த பூஜையைக் காண  தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் மாலை வேளையில் கூடுகிறார்கள்.

வெள்ளை உடை அணிந்த 10 பூஜாரிகளால் இந்த பூஜை செய்யப்படுகிறது. நீராக ஓடும் கங்கை நதிக்கு கற்பூர ஆரத்தி பிரமாண்டமாக காட்டுவதுதான் இதன் சிறப்பு.

வாய்ப்பு இருப்பவர்கள் காசி சென்றால் இந்த அரிய ஆன்மிக நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.

Published by
Abiram A

Recent Posts