கன்னி வைகாசி மாத ராசி பலன் 2024!

கன்னி ராசி அன்பர்களே வைகாசி மாதத்தினைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமான காலகட்டம் என்றே சொல்லலாம். 9 ஆம் இடம் என்று சொல்லப்படுகின்ற பாக்கிய ஸ்தானத்தில் சூர்ய பகவான் இட அமர்வு செய்கிறார்.

குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள். மேலும் கோயில் சார்ந்த அறப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். தான, தர்மங்களைச் செய்து அதில் திருப்தி கொள்வீர்கள். தந்தைவழி ரீதியாகவும், குழந்தைகள் ரீதியாகவும் எல்லையில்லாத மகிழ்ச்சியினை அடைவீர்கள்.

அரசாங்கத்தின் உதவிக்காக நீண்ட காலமாக காத்திருந்தவர்களுக்கு சரியான நபர்கள் மூலம் உங்களுக்கான உதவிகள் கிடைக்கப் பெறும். மேலும் அரசு வேலைக்காகக் காத்திருந்தோருக்கு எதிர்பார்த்த வேலையானது வீடு தேடி வரும்.

மேலும் தந்தைவழி உறவினர்களால் உங்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும்; பிரிந்திருந்த தாய்வழி உறவினர்கள் மீண்டும் ஒன்று கூடுவர். குழந்தை பாக்கியத்துக்கு காத்திருப்போருக்கு நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். கடகத்தில் குரு பகவானின் நட்சத்திரத்தில் சுக்கிரனுடன் செவ்வாய் பகவான் இணைந்துள்ளதால் ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

வாழ்க்கையில் நீங்கள் கனவாக எண்ணியிருந்த பல விஷயங்களையும் தற்போது உங்கள் கையில் அடைவீர்கள். பொருள் சேர்க்கை, சொத்து சேர்க்கை போன்றவை ஏற்படும்.

பூர்விகத்தில் நீங்கள் வாங்க நினைத்த வீடு அல்லது மனை உங்களுக்குக் கிடைக்கப் பெறும். மேலும் பூர்விகத்தில் இருந்த நிலபுலன் சார்ந்த பிரச்சினைகள் சமாதானத்திற்கு வரும்.

வில்லங்கம் இருந்த சொத்துகளையும் பிரச்சினைகளைத் தீர்த்து விற்றுப் பயன் பெறுவீர்கள். மனதில் தெம்பும், தைரியமும் மிக அதிகமாகவே இருக்கும். குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதமாக இல்லாமல் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி அதில் மனநிறைவு கொள்வீர்கள்.

தாயாரின் உடல் நலனில் மிகச் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சிவபெருமானை திங்கள் கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்து வருவது நன்மையினை ஏற்படுத்தும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews