கன்னி மார்கழி மாத ராசி பலன் 2022!

ராசியினை குருபகவான் பார்க்கிறார்; செல்வாக்கு அதிகரிக்கும். 2 ஆம் இடத்தில் கேது பகவான் இருந்து சனி பகவானைப் பார்க்கிறார். கணவன்- மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.

11 ஆம் இடத்தினை குருபகவான் பார்க்கிறார். தொழில்ரீதியாக கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையாகச் செயல்படுதல் நல்லது. வாக்கு ஸ்தானத்தால் பெரும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கப் பெறும்.

4 ஆம் இடத்தில் சூர்யன்- சுக்கிரன்-புதன் இணைந்து இருக்கின்றது. 5 ஆம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் பூர்வ, புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகின்றது. குழந்தைப் பேறுக்காகக் காத்திருப்போருக்கு நிச்சயம் நற்செய்தி கிடைக்கும்.

7 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார், திருமண காரியங்களை நோக்கி எதிர்பார்த்து இருப்போர் விரைவில் சுப செலவினை எதிர்பார்க்கலாம். 8 ஆம் இடத்தில் ராகு பகவான் உள்ளார், நட்பு மற்றும் அக்கம்பக்கத்தினர்களால் பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

அரசு வேலைக்காகக் காத்திருப்போருக்கு நிச்சயம் அரசு வேலை உங்களைத் தேடி வரும். தொழில்ரீதியாக அரசு உதவியுடன் கடன்கள் பெற்று, அபிவிருத்தி செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வருதல் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.